’பொறுப்பேற்றதும் வியூகம் வகுப்பேன்’: முப்படைகளின் தளபதி பிபின் ராவத்

ராணுவ தளபதி பொறுப்பிலிருந்து இன்று பிபின் ராவத் ஒய்வு பெறுகிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அஞ்சலி செலுத்தினார்.

தேசிய போர் நினைவிடத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அஞ்சலி செலுத்தினர்.

New Delhi:

ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று, இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படை தளபதியாக புதிய பொறுப்பை ஏற்க உள்ளார் பிபின் ராவத், இந்த புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் வியூகம் வகுப்பேன் என்று அவர் கூறியுள்ளார். 

ராணுவ தளபதி பொறுப்பிலிருந்து இன்று பிபின் ராவத் ஒய்வு பெறுகிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், எனது பொறுப்பை அடுத்தவருக்கு ஒப்படைக்கும் வரை ராணுவ தளபதியாக எனது பங்கை சரியாக நிறைவேற்றுவேன். தொடர்ந்து, எனக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக நான் பதவியேற்ற பின் வியூகம் வகுப்பேன் என்று கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தன்று உரையாற்றியபோது, 'ராணுவத்தின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில், ராணுவம், கடற்படை, விமானப் படை என, முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்படுவார்' என, அறிவித்தார். 

Newsbeep

இதன்படி, ராணுவம், கடற்படை, விமானப் படை தளபதிகளைப் போல், தலைமை தளபதியும், நான்கு நட்சத்திர அந்தஸ்து உடைய ராணுவ அதிகாரியாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக உத்தரவிடும் அதிகாரிக்கான ஆலோசகராகவும் இவர் செயல்படுவார். 

முப்படைகளின் சேவை விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராக செயல்படுவார். இவர், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் நேரடியாக தொடர்பில் இருப்பார். மூன்று படைகளின் தளபதிகளும் அந்தந்த சேவைகள் தொடர்பான பிரத்யேக விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சருக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்குவார்கள்.