This Article is From Jan 23, 2019

ஆஸ்கர் 2019: சுவாரஸ்யமான தகவல்கள்!

91 வது ஆஸ்கர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.

ஆஸ்கர் 2019: சுவாரஸ்யமான தகவல்கள்!

Roma படத்தின் காட்சி

ஹைலைட்ஸ்

  • Roma படமானது 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
  • Black Panther 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
  • சிறந்த இயக்குனர் பிரிவில் பிராட்லி கூப்பர் இல்லை

91 வது ஆஸ்கர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியல் நேற்று வெளியானது. இந்த அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து சுவாரஸ்யமான தகவல்கள் :

நெட்பிளிக்ஸ் :

இந்த ஆஸ்கர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்கலின் பட்டியலில் நெட்பிளிக்ஸில் வெளியான படங்கள் 14 பிரிவில் உள்ளன. இதில் சிறந்த படத்திற்கான பரிந்துரை பிரிவில் Roma உள்ளது. நெட்பிளிக்ஸ் படம் ஒன்று சிறந்த படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறை.

Roma மொத்தமாக 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மற்றொரு நெட்பிளிக்ஸ் படமான The Balaad of Buster Scruggs மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த டாக்குமெண்ட்ரி பிரிவில் நெட்பிளிக்ஸின் End Game உள்ளது.

2018 ஆம் ஆண்டில், 8 பிரிவுகளில் நெட்பிளிக்ஸ் படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டு  அது 14 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், அமேசான் பிரைமில் வெளியான படங்களில் Cold War படம் மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மார்வலஸ் மார்வல் :

ஆஸ்கர் விருது பட்டியலில் சூப்பர்ஹீரோ படங்கள் அதிகம் இடம் பெறுவதில்லை. ஆனால், இந்த முறை அந்த குறையை மார்வலின் Black Panther தகர்த்தியுள்ளது.

மொத்தம் 7 பிரிவுகளில் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள Black Panther, சிறந்த படத்திற்கான பிரிவிலும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் காமிக் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் ஒன்று ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்கான பிரிவில்  முதல் முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

 

சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த பாடல், சிறந்த இசை, சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த தயாரிப்பு மற்றும் சிறந்த எடிட் ஆகிய பிரிவுகளில் Black Panther பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அல்போன்ஸோவின் சாதனை :

Roma படமானது 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கியவர் அல்போன்ஸோ கியுயரன். அல்போன்ஸோ மட்டுமே நான்கு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அந்த நான்கு பிரிவுகள் : சிறந்த இயக்குனர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு ஆகும்.

மகிழ்ச்சியும் ஏமாற்றமும்:

A Star is Born படத்தின் இயக்குனரான பிராட்லி கூப்பர், சிறந்த இயக்குனருக்கான பிரிவில் இல்லை. இது பெரிய ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் வேறு மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Blackkklansman படத்திற்காக ஸ்பைக் லீ சிறந்த இயக்குனருக்கான பிரிவில் முதல் முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பைக் லீ 2016 ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Beautiful boy படம், சிறந்த துணை நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்படாதது ஏமாற்றமே.

.