"நியூசிலாந்தின் கறுப்பு தினம்" - பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன்!

கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்: "இந்த தாக்குதலை நடத்தியவர் இங்கு வசிப்பவரே இல்லை" என்று குறிப்பிட்டார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

வெள்ளியன்று காலை மசூதியில் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரியாக சுடத்துவங்கினார்.


கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து: 

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் இன்று நடைபெற்ற மசூதி தாக்குதலை 'கறுப்பு தினம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

"கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது விவரிக்க முடியாத அளவுக்கு கொடுமையான வன்முறை தாக்குதல். நியூசிலாந்தில் உள்ள புலம் பெயர்ந்தவர்கள் பலர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் தான்" என்றார்.

மேலும், "இந்த தாக்குதலை நடத்தியவர் இங்கு வசிப்பவரே இல்லை" என்று குறிப்பிட்டார். 

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ''தாக்குதல் நடத்தியவர் ஆஸ்திரேலியர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் வலதுசாரி சிந்தனை கொண்ட தீவிரவாதி என்பது தெரியவந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"ஆஸ்திரேலியா அமைதியை நிலைநாட்ட எப்போதும் நியூசிலாந்துடன் துணை நிற்கும்" என்றார். 

gnt20g9

வெள்ளியன்று காலை மசூதியில் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரியாக சுடத்துவங்கினார். அதனை அந்த தாக்குதல் நடத்திய நபர் நேரடியாக ஒளிபரப்பியதாகவும், ஆனால் அது உறுதி செய்யப்படாத வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மசூதிக்கு வந்தவர்கள் உள்ளே இருக்க, மசூதிக்குள் சற்று நேரத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தொழுகைக்காக வரவவிருந்த நிலையில் இது நடந்துள்ளது

திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்கநியூசி., மசூதியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி! - உயிர்தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்!சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................