ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் மாநில சுயாட்சிக்கு எதிரானது: திமுக குற்றச்சாட்டு

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் மாநில சுயாட்சிக்கு எதிரானது என சட்டப்பேரவையில் திமுக குற்றம்சாட்டியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் மாநில சுயாட்சிக்கு எதிரானது: திமுக குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் திணிக்கப்பட்டு உள்ளது.

நீட் நுழைவுத் தேர்வினால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு தர சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் உறங்கிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்படுகிறது.

முன்னேறிய விகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தரும் மத்திய சட்டம் பற்றி தமிழக அரசின் நிலை என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக நீதியை தீர்த்துப்போக செய்து சாகடிக்கும் செயலை மத்திய பாஜக அரசு செய்கிறது.

முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவர். தமிழகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவது பற்றி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும். சமூக நீதியை காப்பாற்ற தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய எ.வ.வேலு ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் மாநில சுயாட்சிக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் தமிழகத்தில் பொதுவிநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என மத்திய அரசு தெரிவிப்பது, வடமாநில இந்தி மொழி பேசும் மக்களை தமிழகத்தில் குடியேற வைத்து, நமது சலுகைகளை அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யும் என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டை இந்தி பேசும் மாநிலமாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு, தேர்தல் கல்வி என அனைத்தும் மாநில சுயாட்சிக்கு எதிரானதாகவும், கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்ககூடியதாவும் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை புதைத்து, மாநில சுயாட்சிக்கு வேட்டு வைக்கும் செயல்கள் எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் காமராஜ், தமிழ்நாட்டில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என்று உறுதியளித்தார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................