தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு- பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 125!

Coronavirus in Tamilnadu: "திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது"

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு- பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 125!

Coronavirus in Tamilnadu: "டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவருக்கு கொரோனா தொற்று"

ஹைலைட்ஸ்

  • நேற்று மட்டும் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
  • டெல்லி மதக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அதிகமாக பாதிப்பு
  • தமிழகத்தில் மொத்தம் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Coronavirus in Tamilnadu: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 57 ஆக அதிகரித்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள தப்லீக் ஜமாத் மத மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1,131 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 515 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 616 பேரை கண்டறிவதில் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீதம் உள்ள 616 பேரும் தாங்களாக முன்வந்து அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 50 பேரில், 45 பேர் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.

இந்நிலையில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர் குறித்து தமிழக அரசு தரப்பு, “தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவருக்கு கொரோனா தொற்று,” என்று தகவல் தெரிவித்துள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com