ஃபிரான்ஸில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி திடீர் தாக்குதல் - ஒருவர் பலி

கொல்லப்பட்ட நபர் 2016-ம் ஆண்டு முதல் தீவிரவாத செயல்களுக்காக, காவல் துறையின் கண்காணிப்பில் இருந்தவர்

ஃபிரான்ஸில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி திடீர் தாக்குதல் - ஒருவர் பலி
Paris, France:

பிரான்ஸ் தலை நகர் பாரிஸ் அருகே உள்ள ட்ரேபஸ் என்ற சிறிய டவுனில், மர்ம நபர் ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரியை கத்தியால் தாக்கில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை நடந்ததற்கான காரணம் என்ன என்று தெரியாத நிலையில், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு. அதன் தொலைகாட்சி சேனலிலும் இது பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.

“ட்ரேப்ஸில் நடந்த தாக்குதலை நடத்தியவர் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்” என்று ஐ.எஸ்.ஐ.எஸ் தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக திரண்டுள்ள நாடுகளில், குறிப்பிட்ட சிலர் மீது தாக்குதல் நடத்தக் எங்கள் உத்தரவின் பேரில் தாக்குதல் நடந்ததாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அடுத்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பாதுக்காப்பு துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களாக, ஃபிரான்ஸில் திடீர் திடீரென இது போன்ற தாக்குதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட நபர் 2016-ம் ஆண்டு முதல் தீவிரவாத செயல்களுக்காக, காவல் துறையின் கண்காணிப்பில் இருந்தவர்.

வெர்செய்ல்ச் அரண்மனை அமைந்திருக்கும் முக்கிய பகுதியான வெர்செய்ல்ஸ் நகருக்கு அருகில் இருக்கும் இந்த ட்ரேப்ஸ் நகரம் கூட்டு வன்முறை மற்றும் இஸ்லாமியத்தை தீவிரமாக போதிக்கும் மக்கள் கொண்ட இடம்.