This Article is From Feb 11, 2019

அறிவியல் துறையில் சாதித்த பெண்களை கவுரவிக்கும் தினம் இன்று! #WomenInScience

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு பிப்ரவரி 11 ஆம் தேதியை அறிவியல் துறையைச் சேர்ந்த பெண்கள் தினமாக அறிவித்தது

அறிவியல் துறையில் சாதித்த பெண்களை கவுரவிக்கும் தினம் இன்று! #WomenInScience

நோபல் விருதை வென்ற முதல் பெண்மணியான மேரி க்யூரி அவர்களை கவுரவித்து பதிவு செய்யப்பட்டுள்ளது

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு பிப்ரவரி 11 ஆம் தேதியை அறிவியல் துறையைச் சேர்ந்த பெண்கள் தினமாக அறிவித்தது. அதனால் இன்று #WomenInScience என்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பலர் அறிவியல் துறையைச் சேர்ந்த பெண்களின் சாதனைகளை பதிவித்து வருகின்றனர். அதில் சிலவற்றை காண்போம்.

நோபல் பரிசை வென்ற முதல் பெண்மணியான மேரி க்யூரி அவர்களை கவுரவித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு வேறு துறைகளுக்கு நோபல் விருது வென்றவர் என்ற பெருமைக்குரியவர் மேரி க்யூரி.

 

எக்ஸ் – ரே சம்பந்தமாக பல ஆராய்ச்சிகளை செய்தவர் தொரொட்டி கிரவ்ஃபூட். இவரை பாராட்டி ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

யூஎன்டிபி, தங்களது சமூக வலைதளத்தில் டெல்லியைச் சேர்ந்த அக்கன்ஷா குமாரியை பாராட்டி ட்வீட் செய்திருந்தது

50 ஆண்டுகளுக்கு முன் 6 பெண்கள் தெற்கு போல் (Pole) சென்றனர். அதனை குறிக்கும் விதமாக ‘இன்று ஆயிரம் பெண்கள்  தெற்கு போல் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களின் முன்னோடி அவர்கள் தான்' என அந்த ஆறு பெண்களின் புகைப்படம் பகிரப்பட்டது.

மேலும் பல அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட பெண்களின் கதைகளை பகிரப்பட்டன.

Click for more trending news


.