மரியாதை செலுத்த மறுத்ததால் சரமாரி தாக்குதல்! - முன்னாள் அமைச்சரின் சகோதரர் அட்டகாசம்!

முன்னாள் பீகார் அமைச்சரின் சகோதரர் மருந்துகடைக்காரர் ஒருவரை தாக்கியுள்ளார். கடந்த ஜூன் 3ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மரியாதை செலுத்த மறுத்ததால் சரமாரி தாக்குதல்! - முன்னாள் அமைச்சரின் சகோதரர் அட்டகாசம்!

முன்னாள் மத்திய அமைச்சரான ரேணு தேவியின் சகோதரர் பினு ஒருவரை தாக்கியுள்ளார்.

Bettiah, Bihar:

பீகாரில் பெட்டையா நகரில் மருந்து கடை ஒன்றில் புகுந்த நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியரை அடித்து தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தாக்குதலில் ஈடுபட்டவர் முன்னாள் மத்திய அமைச்சரான ரேணு தேவியின் சகோதரர் பினு ஆவார்.

இது தொடர்பாக பரவி வரும் அந்த வீடியோவில், கடந்த 3ஆம் தேதி பினு மருந்து கடைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த மருந்துகடைக்காரரை எழுந்து நின்று மரியாதை செலுத்தும்படி கூறியுள்ளார்.

ஆனால் அவர் மறுத்துள்ளார். இதனால், ஆவேசமடைந்த பினு மருந்து கடைக்காரரை கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து அவரை தர தரவென வெளியே இழுத்து சென்று தனது காரில் ஏற்றி கொண்டு, கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


 

எனினும், இந்த விவகாரம் குறித்து பினுவின் சகோதரி ரேணு தேவி கூறும்போது, தவறான செயல்களுக்கு ஒருபொழுதும் நான் ஊக்கமளித்தது கிடையாது. தற்போது, எனக்கு பினுவுடன் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது, நாங்கள் பேசி கொள்வது கூட இல்லை. இருந்தும் என்னை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி உள்ளனர். நான் உள்பட, யாரேனும் தவறு செய்து இருப்பின் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என உறுதியுடன் கூறினார்.

இதுகுறித்து தலைமை காவலர் ஜெயந்த் காந்த் கூறும்போது, பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளோம். கடத்தலுக்கு பயன்பட்ட 4 சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.