இந்த ஏடிஎம்-ல் கார்டு போட்டால் கொழுக்கட்டை வரும்..!

Ganesh Chaturthi: இந்த இயந்திரத்தின் ஏடிஎம் பட்டன்களில், அமைதி, அறிவு, மன்னிப்புப் போன்ற சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்த ஏடிஎம்-ல் கார்டு போட்டால் கொழுக்கட்டை வரும்..!

Ganesh Chaturthi: விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ஒரு வித்தியாசமான ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது


Pune: 

இந்த விநாயகர் சதூர்த்திக்கு, நாடு முழுவதும் வித விதமான வடிவமைப்புகளிலும் பொருட்களைக் கொண்டும் விநாயகர் சிலை நிறுவப்பட்டு கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ஒரு வித்தியாசமான ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

p4jiiitk

இந்த ஏடிஎம்-ன் ஸ்கீரினுக்கு உள்ளே ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதற்கென்றே தயாரிக்கப்பட்ட கார்டை போட்டால், கொழுக்கட்டை பிரசாதம் வரும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதூர்த்திக்காக ஸ்பெஷலாக இந்த இயந்திரத்தை வடிவமைத்த சஞ்சீவ் குல்கர்னி, ‘இது ஒரு ‘எனி டைம் கொழுக்கட்டை மெஷின்’ ஆகும். ஒரு ஸ்பெஷல் கார்டை சொருகுவதன் மூலம் இந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து கொழுக்கட்டை வரும். தொழில்நுட்பத்தையும் கலாசாரத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக இது எடுக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார்.

ஒரு சாதாரண எடிஎம் இயந்திரம் போலவே, இந்த தனித்துவமான இயந்திரமும் இயங்குகிறது. இந்த இயந்திரத்தின் ஏடிஎம் பட்டன்களில், அமைதி, அறிவு, மன்னிப்புப் போன்ற சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. புனேவில் இந்த ஏடிஎம் இயந்திரம் மிகப் பிரபலமாக மாறியுள்ளதுசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................