மெட்ரோ ரயிலில் 4வது நாளாக நாளையும் இலவசமாக பயணிக்கலாம்!

சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் 4வது நாளாக நாளையும் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மெட்ரோ ரயிலில் 4வது நாளாக நாளையும் இலவசமாக பயணிக்கலாம்!

சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 10ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் இன்று இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களிடையே மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த இலவச பயண அறிவிப்பை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டது. இதனையடுத்து சிறுவர்கள் பெரியவர்கள் என ஏராளமானோர் கடந்த 3 நாட்களாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

நேற்று மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாகவும், பொதுமக்களின் ஆர்வத்தை அடுத்து இன்றும் சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது 4வது நாளாக நாளையும் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................