This Article is From Feb 22, 2019

அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மாணவியால் விபரீதம்! - சிசிடிவி வீடியோ

விபத்து சம்பவம் குறித்து சிசிடிவி வீடியோ காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் இடது புறமாக திரும்பும் போது எதிரே வேகமாக வந்த கார் மோதியது.

அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மாணவியால் விபரீதம்! - சிசிடிவி வீடியோ

கார் மோதியதல் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தூக்கி வீசப்பட்டார்.

New Delhi:

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பாலாஜி (22) 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜி படுகாயமடைந்தார். அவர் மீது மோதிய கார் நிற்காமல் மீண்டும் அதிவேகமாக சென்று விட்டது. படுகாயமடைந்த பாலாஜியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து சம்பவம் குறித்து சிசிடிவி வீடியோ காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் இடது புறமாக திரும்பும் போது எதிரே வேகமாக வந்த கார் மோதியது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவரது மகள் தர்சனா ரூத்(21) என்பது தெரிய வந்தது. தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் தனது தோழியுடன் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

.