சண்டை செய்யனும்: சிறுத்தையுடன் ஒத்தைக்கு ஒத்தை நின்ற குட்டி வரையாடு

சிறுத்தையிடமிருந்து தப்பிக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை குட்டி ஆடு சண்டையிட்டு நின்றது பலரையும் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தது.

சண்டை செய்யனும்: சிறுத்தையுடன் ஒத்தைக்கு ஒத்தை நின்ற குட்டி வரையாடு

இந்த வீடியோ தென்னாப்பிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவின் வழிகாட்டியான ஆண்ட்ரே ஃபரி என்பவரால் எடுக்கப்பட்டது

சிறுத்தையிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஒரு குட்டி வரையாடு சிறுத்தையுடன் ஒத்தைக்கு ஒத்தையாக நின்று சண்டையிடுகிறது. இந்த வீடியோ தென்னாப்பிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவின் வழிகாட்டியான ஆண்ட்ரே ஃபரி என்பவரால் எடுக்கப்பட்டது (இதற்கான வீடியோவை NDTV ஆங்கில தளத்தில் பார்க்கலாம்.)

குட்டி வரையாட்டிற்கு  தப்பிக்க வேறு வழியில்லை தெளிவாக புரிந்துவிட்டது. அதனால், முடிந்தஅளவிற்கு சிறுத்தையுடன் தலையால் முட்டி சண்டையிடுகிறது. சிறுத்தையும் என்னதான் பண்ணுவ என்பது போல் நிதானமாக நின்று குட்டி வரையாடு செய்வதை பார்த்தபடியும் அது போகும் திசைக்கெல்லாம் செல்கிறது. 

ஓரளவு வெளிச்சமான மாலையில் தொடங்கிய இந்த சண்டை. நன்றாக இருட்டிய பிறகு விளையாடியது போதும் என்பது போல் சிறுத்தை வரையாட்டின் கழுத்தை கவ்வி தன் உணவாக எடுத்து சென்று விடுகிறது. 

சிறுத்தையிடமிருந்து தப்பிக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை குட்டி ஆடு சண்டையிட்டு நின்றது பலரையும் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தது. 

Click for more trending news

More News