அதிகாரப்பூர்வ அறிவிப்பு: தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன!

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் திறக்கப்படுகிறது. 550 பேர் மட்டுமே வரிசையில் நிற்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். தனிநபர் இடைவெளியுடன் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன!

நாளை முதல் டாஸ்மாக் செயல்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் திறக்கப்படுகிறது. 550 பேர் மட்டுமே வரிசையில் நிற்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். தனிநபர் இடைவெளியுடன் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விற்பனை தொடர்பான வழக்கை 2 மாதங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதால் இன்னும் 2 மாதங்களுக்கு தடையின்றி டாஸ்மாக் செயல்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ம்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு மே.7ம் தேதி முதல் மீண்டும் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.

Newsbeep

இதையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர். 

இந்த நிலையில், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம்தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து, ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆன்லைனில் மது விற்க முடியாது. அவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஆன்லைன் விற்பனை சாத்தியம் கிடையாது என தமிழக அரசு வாதிட்டது. 

இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் நீதிபதிகள், மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.