20 கால் விரல்கள் 12 கை விரல்கள் கொண்ட மூதாட்டி : சூனியக்காரி என ஒதுக்கப்பட்ட அவலம்

இந்த குறைபாட்டை சரி செய்ய எனக்கு போதிய வசதி இல்லை. ஊர் மக்கள் சூனியக்காரி என்று ஒதுக்கி வைப்பதாக வேதனையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

20 கால் விரல்கள் 12 கை விரல்கள் கொண்ட மூதாட்டி : சூனியக்காரி என ஒதுக்கப்பட்ட அவலம்

இந்த குறைபாட்டை சரி செய்ய எனக்கு போதிய வசதி இல்லை குமாரி நாயக்

Ganjam:

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டியின் கைகளில் 12 விரல்களும் கால்களில் 20 விரல்களும் உள்ளன. பிறவியிலேயெ இத்தகைய குறைபாட்டுடன் பிறந்த அவரை அவ்வூர் மக்கள் சூனியக்காரி என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துள்ளனர். 

தனது வேதனையான வாழ்க்கை முறை குறித்து நாயக்  குமாரி (63) ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய போது “நான் பிறக்கும் போதே எனது கை, கால்களில் இத்தகைய குறைபாடு ஏற்பட்டிருந்தது. இது பிறவிக்குறைபாடு ஆனால், இதை இங்குள்ளவர்கள் மூட நம்பிக்கையில் அதை புரிந்துகொள்ளத் தயாராக இல்லை. 

இந்த குறைபாட்டை சரி செய்ய எனக்கு போதிய வசதி இல்லை. ஊர் மக்கள் சூனியக்காரி என்று ஒதுக்கி வைப்பதாக வேதனையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். 

p7igj3e

இது தொடர்பாக ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பினாகி மொஹாந்தி கூறுகையில் “கை கால்களில் கூடுதலாக ஓரிரு விரல்களுடன் பிறப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், 20 கால் விரல்கள், 12 கைவிரல்கள் கூடுதலாக இருப்பது மிகவும் அரிதான நிகழ்வு.

இதனை பாலிடெக்டில் (Polydactyly) என்போம். இது மரபணு மாற்றங்களால் ஏற்படும் பிறவிக் குறைப்பாடு. இத்தகைய நிலை 5000இல் ஒருவருக்கு ஏற்படவே வாய்ப்புள்ளது. இத்தகைய நோயாளிகள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக நெருக்கடியையும் சேர்த்தே எதிர்கொள்ளும் அவலம் இங்கு உள்ளது என்றார். 

More News