This Article is From Dec 11, 2019

ஒடிஸாவில் 3 ஆண்டுகளாக கழிப்பறையில் வசிக்கும் 72 வயது மூதாட்டி திரெளபதி

கனிகா கிராம நிர்வாகத்தால் கட்டப்பட்ட கழிப்பறைக்குள் சமைத்து தூங்கும்போது பேரன் மற்றும் மகள் உட்பட முழு குடும்பமும் வெளியே தூங்குவதாக திரெளபதி பெஹெரா கூறுகிறா

ஒடிஸாவில் 3 ஆண்டுகளாக கழிப்பறையில் வசிக்கும் 72 வயது மூதாட்டி திரெளபதி

அரசு தரும் வீட்டிற்காக காத்திருக்கிறார்.

Mayurbhanj (Odisha):

ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் 72 வயதான பழங்குடி பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக மாநில அரசாங்கத்திடம் தங்குமிடம் பெறத் தவறியதால் கழிப்பறையில் வசித்து வருகிறார். 

கனிகா கிராம நிர்வாகத்தால் கட்டப்பட்ட கழிப்பறைக்குள் சமைத்து தூங்கும்போது பேரன் மற்றும் மகள் உட்பட முழு குடும்பமும் வெளியே தூங்குவதாக திரெளபதி பெஹெரா கூறுகிறார்.

இந்த விவகாரத்தை அதிகாரிகளிடம் கூறியிருந்தும் அவர்கள் தங்குமிடம் வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால், இன்னும் தரப்படவில்லை தன் சொந்த வீட்டிற்காக காத்திருக்கிறார்.

கிராம அதிகாரிகள் ஏ.என்.ஐயிடம் பேசியபோது, “அந்த பெண்மணிக்காக வீட்டைக் கட்டுவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. கூடுதல் வீடு கட்டுவதற்கான உத்தரவு திட்டத்தின் மூலம் வரும்போது அந்த மூதாட்டிக்காக ஒன்றை வழங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய,  மனித உரிமை வழக்கறிஞர் சத்யா மொஹந்தி “மத்திய அரசு மற்றும் ஒடிஸா அரசாங்கம் இது குறித்து ஆராய வேண்டும். இது மிகவும் வேதனைக்குரிய ஒன்று” என்று வலியுறுத்தினார்.

.