This Article is From Aug 13, 2019

வீட்டை தரைமட்டமாக்கி அச்சுறுத்திய யானை! மரத்தில் வீடுகட்டி மகனுடன் குடிபெயர்ந்த கிராமவாசி!!

யானை அடிக்கடி வந்து தொந்தரவு அளிப்பதாக கூறும் கிராமவாசி, அரசு தங்களுக்கு வீடு வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

வீட்டை தரைமட்டமாக்கி அச்சுறுத்திய யானை! மரத்தில் வீடுகட்டி மகனுடன் குடிபெயர்ந்த கிராமவாசி!!

மரத்தில் கட்டிய வீட்டில் அமர்ந்திருக்கும் சுத்யா மகாகுத்

ஒடிசாவில் வீட்டை தரைமட்டமாக்கி யானை அச்சுறுத்தியதால் தனது மகனுமடன் மரத்தில் வீடுகட்டி கிராமவாசி ஒருவர் அங்கு குடிபெயர்ந்துள்ளார். 

ஒடிசாவில் கியோஞ்சார் மாவட்டத்தில் கசுமிதா என்ற கிராமம் உள்ளது. இங்கு 3 நாட்களுக்கு முன்பாக யானைக் கூட்டம் ஒன்று வந்து அங்கு வசித்த சுத்யா மகாகுத் என்பவரின் வீட்டை தரை மட்டமாக்கியது. 

மேலும் அடிக்கடி அந்தப் பகுதிக்கு வந்து செல்லும் வழக்கத்தையும் யானைகள் கொண்டிருந்தன. இதனால் அச்சமடைந்த சுத்யா மகாகுத் தனது மகனுடன் மரத்தில் வீடுகட்டத் தொடங்கினார். பணிகள் முடிந்ததும் மரத்தில் சென்று மகனுடன் அவர் குடியேற்றி விட்டார். யானைகள் அச்சுறுத்தி வருவதால் அரசு தனக்கு வேறு இடத்தில் வீடு கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நாங்கள் பாதிக்கப்பட்ட சுத்யாவிடம் பேசினோம். அவர் நிலைமையை புரிந்து கொண்டோம். யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம்' என்றனர். 

.