This Article is From Nov 16, 2018

ஒடிஸாவில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

இதை அறிந்த ஒடிஸாவின் முதல்வர் நவீன் பாட்நாயக் இந்த சம்பவத்தை  குற்றபிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். 

ஒடிஸாவில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

11 கிலேவாட் மின்சாரம் பாயும் வேலியின் மேல் யானை ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தது

Mayurbhanj (Odisha):

ஒடிஸாவில் உயர் மின்சாரம் பாயும் கம்பியின் மேல் யானை ஏறியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

நேற்று இரவு, ஒடிஸாவில் உள்ள மாயூர்பகான்ஜ  சான்சாராகபோசி கிராமத்தில் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த 11 கிலேவாட் மின்சாரம் பாயும் வேலியின் மேல் யானை ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தது.


இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே மின் கம்பிகள் தாக்கி 7 யானைகள்  பலியானது. அதன் பின்னரும் அக்கம்பி சரிசெய்யப்படாததால் இந்த சம்வம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் அங்குள்ள கிராம மக்கள் மின்சார வேலி மிக தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மிருகங்கள் மட்டுமின்று மனிதர்களும் பாதிக்கப்படலாம் என கூறுகின்றனர்.இதை அறிந்த ஒடிஸாவின் முதல்வர் நவீன் பாட்நாயக் இந்த சம்பவத்தை  குற்றபிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். 


மேலும், சுற்றுச்சுழல் அமைச்சரகம் வெளியிட்ட அறிக்கையின் படி 2009 - 2017  வரை சுமார் 655 யானைகள் இறந்துள்ளதாகவும். அவை மின்சாரம் தாக்கியோ, இரயில்களில் மோதியோ அல்லது வேட்டையாடி இறப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

.