This Article is From Nov 20, 2019

Maharashtra-வில் எப்போது ஆட்சி… ‘நாளை தெரிந்துவிடும்,’ என சிவசேனா சூசகம்!

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி இறுதியாகும் நிலையில் இருக்கின்றது.

Maharashtra-வில் எப்போது ஆட்சி… ‘நாளை தெரிந்துவிடும்,’ என சிவசேனா சூசகம்!

‘ஆலோசனைகளில் பல தடைகள் குறித்து தெளிவு பெற்றுவிட்டோம். நாளை இறுதி முடிவு தெரிந்துவிடும்’

Mumbai:

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ‘ஆலோசனைகளில் பல தடைகள் குறித்து தெளிவு பெற்றுவிட்டோம். நாளை இறுதி முடிவு தெரிந்துவிடும்', என சிவசேனா தரப்பு சுடசுட தகவலைத் தந்துள்ளது. 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு இன்று நடக்கிறது. மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்னை குறித்து இருவரும் பேசுவார்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, சிவசேனாவின் மூத்த நிர்வாகி சஞ்சய் ராவத், “கடந்த 10 - 15 நாட்களாக கூட்டணி தொடர்பாக உருவான பல தடைகளும் தகர்த்தெறியப்பட்டு விட்டன. நாளையுடன் அனைத்துத் தடைகளும் கடக்கப்படும்,” என்று சூசக பதிலைக் கூறியுள்ளார். 

அவர் மேலும், “காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு இடையே பல்வேறு உட்கட்சி விவகாரங்கள் இருந்தன. டிசம்பர் முதல் வாரத்தில் சிவசேனா முதல்வர் தலைமையிலான மகாராஷ்டிர அரசு ஆட்சிக்கு வரும். சீக்கிரமே கட்சிகளுக்கு இடையேயான சந்திப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
 

m8akiieg

3 கட்சிகளும் கூட்டணி குறித்து இறுதி முடிவு எட்டுவிட்டதாக தகவல்.

இந்தளவுக்கு ஆலோசனைகளுக்கு நேரம் எடுப்பதற்குக் காரணம், சிவசேனாவைப் பொறுத்தவரை எந்த முடிவாக இருந்தாலும் உடனடியாக எடுக்கப்படும். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் கட்சிக்குள் ஒரு முடிவு குறித்து விவாதிக்கும் நடைமுறை இருக்கிறது. அதனால்தான் நேரம் எடுக்கிறது. ஆனால், நாளை அனைத்து குறித்தும் தெளிவு ஏற்பட்டுவிடும்,” என்று விளக்கமாக கூறியுள்ளார். 

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

தேர்தலுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, முதல்வர் பதவியில் பங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பாஜக-வுக்கு வைத்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். 

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி இறுதியாகும் நிலையில் இருக்கின்றது.

.