“வேற கேளுங்க… கோபத்தில எதாவது சொல்லிடப் போறேன்…”- RSS பற்றிய கேள்விக்கு சீறிய சீமான்!

Seeman: “ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பற்றியெல்லாம் கிளறிவிட்டுக் கேள்வி கேட்காதீர்கள்"

“வேற கேளுங்க… கோபத்தில எதாவது சொல்லிடப் போறேன்…”- RSS பற்றிய கேள்விக்கு சீறிய சீமான்!

Seeman: "மக்களைவிட நாட்டைவிட நம் மதம்தான் முக்கியம் என்று முடிவெடுத்துவிட்டால்..."

சென்னையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கொண்டாட்டங்களுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், மத்திய அரசின் கொள்கைகள் பற்றியும் அணுகுமுறைகளைப் பற்றியும் அடுக்கடுக்காக விமர்சித்தார். 

சீமான் பேசுகையில், “ஆட்சியில் உள்ள பாஜகவின் தாய் அமைப்பு ஆர்எஸ்எஸ். அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அந்த இயக்கத்தின் முன்னோடிகள் இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட வரலாறு உள்ளதா. ஒரேயொரு வரலாற்றுச் சான்றைக் காண்பிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். வெள்ளையர்களிடம் கும்பிடுப் போட்டக் கூட்டம் இது. ஆனால், அன்று இருந்த ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள். அன்றிருந்த முஸ்லிம், கிறித்துவ மக்கள் விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். அவர்கள் இன்று உங்களுக்கு தேசத் துரோகியாகத் தெரிவார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு நீங்கள் சட்டம் கொண்டு வருவீர்கள்.

8vooa0sg

ஆனால், இந்த தேசத்தின் பொருளாதாரத்தை முன்னேற்று உங்களிடம் திட்டங்கள் இருக்காது, வேலைவாய்ப்பின்மையைப் போக்க திட்டங்கள் இருக்காது, வறுமையை ஒழிக்க, தூயக் காற்று, நீர் கொடுக்க வழிமுறைகள் பற்றித் தெரியாது. பசுமாடு, பாகிஸ்தான் நாடு, ஜெய் ஸ்ரீராம் கோஷம்… இதைவிட்டால் உங்களுக்கு ஒரு அரசியலும் கிடையாது,” என்று சொல்லி சிரித்த சீமான்,

தொடர்ந்து, “ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பற்றியெல்லாம் கிளறிவிட்டுக் கேள்வி கேட்காதீர்கள். கோபத்தில் எதாவது சொல்லிவிடப் போகிறேன்,” என்று இன்னும் சத்தமாக சிரித்தார். 

மேலும் மத்தியில் இருக்கும் பாஜக அரசு பற்றி, “இந்த நாடும் அதன் மக்களும்தான் நாம் சார்ந்திருக்கும் மதத்தைவிடப் பெரியது என்று ஆட்சி செய்பவர்கள் யோசிக்க வேண்டும். ஆனால், மக்களைவிட நாட்டைவிட நம் மதம்தான் முக்கியம் என்று முடிவெடுத்துவிட்டால், இந்த நாடு நாசமாய் போவதை யாராலும் தடுக்க முடியாது. அதைத்தான் நாம் இன்று பார்த்து வருகிறோம்,” என்று முடித்தார். 

More News