இரயிலில் இனி கூடுதல் சாமான்கள் ஏற்றிச்செல்ல கட்டணம் வசூலிக்கப்படும்!

விமான சேவை விதிமுறைகளைப் போலவே, கூடுதல் சாமான்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்

 Share
EMAIL
PRINT
COMMENTS
இரயிலில் இனி கூடுதல் சாமான்கள் ஏற்றிச்செல்ல கட்டணம் வசூலிக்கப்படும்!
New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. இரயிலில் கொண்டு செல்லும் கூடுதல் சாமன்களுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது
  2. கூடுதல் சாமான்கள் எடுத்து செல்ல முன்கூட்டிய பதிவு செய்ய வேண்டும்
  3. விதிமுறைகளுக்கும் எதிராக செய்தால், அபராதம் விதிக்கப்படும்
புதுடில்லி : விமான சேவைகள் போல, இரயில் பயணங்களில் கொண்டு செல்லும் கூடுதல் சாமன்களுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, பயணிகள் எடுத்து செல்லும் சாமான்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. அதுமட்டுமின்றி, குறிப்பிட அளவு எடுத்து செல்ல வேண்டும் என்ற விதிமுறை இல்லாமல் இருந்தது. அதனால், அளவுக்கு அதிகமான பைகளை எடுத்து செல்வதினால், மற்ற பயணிகள் புகார் அளிப்பதாக இரயில்வே துறை அதிகாரிகள் கூறினர்.

விமான சேவை விதிமுறைகளைப் போலவே, கூடுதல் சாமான்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும், அதற்கு முன்கூட்டிய பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, கூடுதல் சாமான்களை தனிப்பெட்டியில் ஏற்ற வேண்டும்.

எனினும், சாமான்களுக்கான கட்டணம் குறைந்த விலையிலேயே இருக்க கூடும் என இரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விதிமுறைகளுக்கும் எதிராக, கட்டணம் செலுத்தாமல், கூடுதல் சாமான்கள் ஏற்றி சென்றால், அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபராத கட்டணம், நிர்ணையிக்கப்பட்ட கட்டணத்தின் ஆறு மடங்கு அபராதத்தை கட்ட வேண்டும்.

ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்த விதிமுறைகள் நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் அமலுக்கு வர உள்ளது. விமானத்துறை சேவையில் இருப்பது போல இல்லாமல், இரயில் நிலையங்களில், பயணங்களின் போது கனமாக இருக்கக் கூடிய பெட்டிகள், பைகள் ஆகியவற்றை தோராயமாக குறிவைத்து சரிபார்க்கப்படுவர்.

“முன்பே விதிக்கப்பட்ட விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் இருந்தோம். இனிமேல் கண்டிப்பாக சரிபார்க்கபடும்” என்று வேத் பிரகாஷ், இரயில்வே தகவல் வாரியத்துறை உயர் அதிகாரி கூறினார்.

விதிமுறைகளின்படி, முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்பவர் 70 கிலோ சாமான்கள் இலவசமாகவும், அதிகபட்சமாக 150 கிலோவும் எடுத்து செல்லலாம். குளிசாதன இரண்டு டையர் பயணிகள், 50 கிலோ இலவசமாகவும், அதிபட்சமாக 100 கிலோவும், படுக்கை வசதி மற்றும் இரண்டாம் வகுப்பு பயணிகள் 40 மற்றும் 35 கிலோ எடுத்துச்செல்லலாம். அதிகபட்சமாக 80 கிலோவும், 75 கிலோவும் எடுத்துச் செல்லலாம்.


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................