This Article is From Apr 30, 2019

தமிழக ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கட்டண மீட்டர்: அரசு பதிலளிக்க உத்தரவு

மனுதாரர் தரப்பில் இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாததால் பயணிகளுக்கான பாதுகாப்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டிய நிலை தொடர்ந்து வருவதாக வாதிடப்பட்டது. டெல்லியில் இந்த முறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டப்பட்டது.

தமிழக ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கட்டண மீட்டர்: அரசு பதிலளிக்க உத்தரவு

இந்த அரசாணைப்படி 2014 ஆம் ஆண்டு சென்னையிலும் பின்னர் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட்டது.

Chennai:

ஆட்டோகளில் ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்களை பொருத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஹத் பாதுகாப்பு சமுதாய அறக்கட்ளையின்  சார்பாக தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு கடந்த 2013 -ஆம் ஆண்டு ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்களைப் பொருத்த அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைப்படி 2014 ஆம் ஆண்டு சென்னையிலும் பின்னர் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட்டது.  

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கைய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில் இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாததால் பயணிகளுக்கான பாதுகாப்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டிய நிலை தொடர்ந்து வருவதாக வாதிடப்பட்டது. டெல்லியில் இந்த முறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டப்பட்டது. 

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைத்தனர். 

.