'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' நீரவ் மோடியின் சிறை வாழ்க்கையும் விசாரணையும்

இங்கு போதை பொருள் விற்பவர்கள் அல்லது மன நலக்கோளாறு உள்ளவர்கள் போதிய படிப்பறிவு இல்லாதவர்களே அதிகம்”

 Share
EMAIL
PRINT
COMMENTS
'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' நீரவ் மோடியின் சிறை வாழ்க்கையும் விசாரணையும்

லண்டனில் மிக முக்கிய நகரில் பெரிய லக்ஷூரியஸ் அப்பார்ட்மெண்டில் வசித்து வந்த மோடி


London: 

இந்தியாவில் 2 பில்லியன் டாலர் வரை பணமோசடி குற்றச்சாட்டப்பட்டவர் நீரவ் மோடி.  இவர் தப்பிச் சென்று லண்டனில் வசித்து வந்தவரை லண்டன் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனனர். இங்கிலாந்து நாட்டு நீதிபதி ஜாமீனை நிராகரித்ததால் இந்த ஆண்டு ஹோலி நாளுக்கு சிறைக்கம்பிக்களுக்குப் பின்னே உள்ளார். 48 வயதான நீரவ் மோடி செவ்வாய் அன்று கைது செய்யப்பட்டார். 

நீதிபதி மேரி மலோன் மார்ச் 29 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி தென்மேற்கு லண்டனில் உள்ள மெஜிஸ்டி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். நீரவ் மோடி தனிச் சிறையில் வைக்கப்படுவார் என்று நம்பப் பட்டு வந்தது. ஆனால், அதிகளவு கைதிகள் வசிக்கும் கிட்டத்தட்ட 1,430 ஆண் கைதிகள் உள்ள சிறையில் தற்போது நீரவ் மோடி இருந்து வருகிறார். இந்தியாவில் உயர் பணக்காரர்கள் மத்தியிலும் புகழ்பெற்ற வட்டாரங்களுக்கு மத்தியில் மிகவும் பழக்கமானவர் நீரவ் மோடி இந்த கடுமையான சூழலை  எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

சிறைச்சூழல்

பிப்ரவரி -மார்ச் 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் லண்டனில் சிறைச்சாலை உயரதிகாரி பீட்டர் கிளார்க் “இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைச்சாலைதான் மிக அதிக கைதிகள் உள்ள சிறைச்சாலையாகும். இங்கு போதை பொருள் விற்பவர்கள் அல்லது மன நலக்கோளாறு உள்ளவர்கள் போதிய படிப்பறிவு இல்லாதவர்களே அதிகம்” என்று கூறுகிறார். 

“6 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளதாகவும் இங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் கையில் பாதுகாப்புக்கு சில அதிகாரிகள் தவிர யாரும் கத்திகள் வைத்திருப்பதில்லை, மேலும் சிறைச்சாலைக்குள் நுழையும் அதிகாரிகள் கையில் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. சிறைக்கைதிகள் வாழ்வு ஆபத்தானதாகத்தான் உள்ளது. சிறையில் ஆபத்து என்றால் அழைக்கும் மணிகள் கூட போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கிறார். இந்த சிறைச்சாலையில் ஒரு அறையில் ஒருவர் மட்டும் தங்கும் விதத்தில்தான் கட்டப்பட்டுள்ளது ஆனால், தற்போது ஒரு அறையில் இருவர் வசிக்க வேண்டும். கழிவறைகள் கூட மறைக்க வெறும் திரைத்துணிகளால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

லண்டனில் மிக முக்கிய நகரில் பெரிய லக்ஷூரியஸ் அப்பார்ட்மெண்டில் வசித்து வந்த மோடி இருக்கும் சிறைச்சாலையின் சூழல் இதுதான்.

விசாரணை விவரங்கள்:

 கடந்த புதனன்று நடந்த நீதிமன்ற விசாரணையில் அவருடைய வழக்கறிஞர் (பாரிஸ்டர்) நீரவ் மோடி பெற்றுள்ள தேசிய காப்பீடு நம்பரை வழங்கினார். (இது பொதுவாக இங்கிலாந்து நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படக் கூடியது) நீரவ் மோடி கவுன்சிலர் வரி கட்டுவதாகும் (இங்கிலாந்து நாட்டு குடிமக்கள் கட்டும் வரி) முகவரிச் சான்று என அனைத்து அடையாள ஆவணங்களையும் சமர்பித்து. நீர்வ் மோடி,  இந்திய அரசு மற்றும் இங்கிலாந்து அரசின் விசாரணைகளுக்கு வெளிபடையாக ஒத்துழைப்பார் என்றும் தப்பி ஓடும் எண்ணம் ஏதும் இல்லை என்று இந்திய அரசாங்கத்திற்கு எதிராக வாதிட்டார். ஆனால் கடைசியில் நீதிபதி நீரவ் மோடிக்கு எதிராகவே தீர்ப்பினை வழங்கினார். மார்ச் 29 வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். 

நீரவ் மோடி பணமோசடியில் ஈடுபட்ட டயமண்ட்ஸ் ஆர் அஸ், ஸ்டெல்லர் டயமண்ட்ஸ், சோலார் டயமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குதாரர் ஆவார். பஞ்சாப் தேசிய வங்கியில் ‘லெட்டர்ஸ் ஆஃப் அண்டர்டேக்கிங்' என்ற முறையில் மோசடி செய்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................