ஆயுதத்தை சோதித்த கிம்... அமெரிக்கா பேச்சை மீறும் வடகொரியா!

என்ன மாதிரியான கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்கவில்லை.

ஆயுதத்தை சோதித்த கிம்... அமெரிக்கா பேச்சை மீறும் வடகொரியா!

ட்ரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தபோது போடப்பட்ட ஒப்பந்தங்களும் மேலோட்டமானதாகவே இருந்தது.

Seoul, South Korea:

அமெரிக்காவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு பிறகு வட கொரியா சக்தி வாய்ந்த ஆயுதத்தை சோதித்துள்ளதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சோதனையை தேசிய அறிவியல் சோதனைக்கூடத்தில் கிம் நேரில் பார்வையிட்டதாக கூறியுள்ளது.

இந்தப் புதிய உயர் தொழில்நுட்ப ஆயுதம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக 'யோன்ஹப்' செய்தி நிறுவனம் கூறியுள்ளது. என்ன மாதிரியான கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்கவில்லை.

இந்த உயர் தொழில்நுட்ப ஆயுதம் என்பது பாதுகாப்பு மற்றும் போர் பலத்தை வலுப்படுத்தும் ஆயுதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

Newsbeep

அமெரிக்காவுடனான சந்திப்புக்கு பின் அணுஆயுத ஒப்பந்தங்களையும், தளங்களையும் கைவிடுவதாக வட கொரியா அறிவித்திருந்தது. ட்ரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தபோது போடப்பட்ட ஒப்பந்தங்களும் மேலோட்டமானதாகவே இருந்தது. 

வடகொரியாவின் இந்த நடவடிக்கை அவர்களது முடிவில் இன்னும் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் மீண்டும் கிம்-ட்ரம்ப் சந்திப்பு நிகழலாம் என்றும் கூறியிருந்தார்.