'சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன!'-அமைச்சர் கவலை

அமைச்சர் ஹர்ஷ்வர்தன், 'சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் சதவிகிதம் இந்திய அளவில் அதிகரித்துள்ளது' என்று கூறியுள்ளார்.

'சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன!'-அமைச்சர் கவலை

ஹைலைட்ஸ்

  • 2015 ஆம் ஆண்டு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன
  • நாட்டின் ஒரு அனல் மின் நிலையமும் புதிய விதிமுறைகளை பின்பற்றவில்லை
  • தொடர்ந்து மாசு வெளிபடுத்தும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன

இன்று சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பேசியுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன், `சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் சதவிகிதம் இந்திய அளவில் அதிகரித்துள்ளது' என்று கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழலின் நிலை என்கிற அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் ஹர்ஷ்வர்தன், `பல காரணிகளை வைத்து தொழிற்சாலைகளில் மாசுபடுத்தும் அளவீடு தொடர்ந்து இந்திய அளவில் செய்யப்பட்டு வருகின்றன. 2010 முதல் 2014 வரை இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இதை வைத்துப் பார்த்தால், நாட்டில் இருக்கும் 71 சதவிகித தொழிற்சாலைகள் அவர்கள் வெளியிடும் மாசுக்களை குறைக்க தேவையான தயாரிப்புகளோடு இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. இந்த நான்கு அண்டுகளிலும் 71 சதவிகித நிறுவனங்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட பல தர மதிப்பீடுகளை அடைந்தன. ஆனால், 2010 ஆம் ஆண்டு வெறும் 10 சதவிகித தொழிற்சாலைகளே எந்த தர நிர்ணயிங்களையும் மதிக்காமல் இருந்தன. ஆனால், 2014 ஆம் ஆண்டு, இந்த சதவிகிதம் 17 ஆக உயர்ந்துள்ளது. இது மிகவும் கவலை தரும் ஒரு புள்ளி விபரம் தான். குறிப்பாக குஜராத்தில் 28.76 சதவிகித தொழிற்சாலைகளும், மகாராஷ்டிராவில் 25.16 தொழிற்சாலைகளும், ஆந்திரப் பிரதேசத்தில் 19.71 தொழிற்சாலைகளும் மிகவும் ஆபத்தான நச்சுக்களை தினம் தினம் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி வெளியிட்டு வருகின்றன' என்று வருத்தம் தெரிவித்தார். 

சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பிற சமூக செயற்பாட்டாளர்களும், இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்தபடி தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் நடந்து கொள்வது கிடையாது. விதிமுறைகள் ஏராளமான தொழிற்சாலைகளால் மதிக்கப்படாமல் இருக்கிறது என்று குற்றம் சாட்டினர்.

பல ஆண்டுகளாக இந்தியாவில் ஒரே வித சுற்றுச்சூழல் நடைமுறைகள் தான் பின்பற்றி வரப்பட்டன. குறிப்பாக, தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 2015 ஆண்டு புதிய எமிஷன் ஸ்டாண்டர்டுகளை அரசு வெளியிட்டது. 

குறிப்பாக அனல் மின் நிலையங்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகள் அரசு தரப்பிலிருந்து விதிக்கப்பட்டன. ஆனால், நாட்டில் இருக்கும் 160 அனல் மின் நிலையங்களில் ஒன்று கூட, இந்த விதிமுறைகளுக்கு ஏற்றவாறு ஒரு சின்ன மாற்றத்தைக் கூட செய்யவில்லை. (इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)