This Article is From May 27, 2019

பாலியல் பலாத்கார வழக்கில் உத்தர பிரதேச எம்.பிக்கு ஜாமீன் மறுப்பு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வான ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி அனிருத் போஸ் இந்த வழக்கை விசாரித்தனர்.

பாலியல் பலாத்கார வழக்கில் உத்தர பிரதேச எம்.பிக்கு ஜாமீன் மறுப்பு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

வாரணாசி கல்லூரி மாணவி குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் கோசி சட்டப்பேரவை உறுப்பினரான அத்துல் ராய், வாரணாசி ஒரு கல்லூரி  மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார். விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வான ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி அனிருத் போஸ் இந்த வழக்கை விசாரித்தனர்.

 அப்போது எம்.பிக்கு எந்தவொரு வகையிலும் ஆதரவாக பாதுகாப்பு கிடைக்காது என்று கூறி அதுல் ராயின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக கூறினர். மனுவில் கைது செய்யக்கூடாது என்று கோரப்பட்டிருந்தது. 

இதற்கு முன்பு உயர்நீதிமன்றம் ராய்க்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க மறுத்து விட்டது.

கல்லூரி மாணவி மே 1ம் காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார். அதில் பொய்யாக காரணம் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றுன் தன் மனைவியிடம் தன்னை அறிமுகப்படுத்தி விட்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் எம்.பி கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.