கல்விக் கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை - அரசு

கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

கல்விக் கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை - அரசு

கல்விக் கடன்களை மீட்டெடுப்பதற்கான கட்டாயமற்ற வழிமுறைகளை பின்பற்ற வங்கிகள் தயாராக உள்ளன (file photo)

New Delhi:

கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

பொதுத்துறை வங்கிகள் வழங்கிய தரவுகளின் படி 2016-17 முதல் 2019மார்ச் வரையிலான கடந்த மூன்று ஆண்டுகளில் நிலுவையில் உள்ள கல்விக் கட்ன்களின் அளவு 2019 செப்டம்பரில் ரூ 67,685.59 கோடியிலிருந்து 75,450.68  கோடியாக உயர்ந்துள்ளது. 

இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி இந்த கணக்குகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான கணக்குகள் நிலையானவை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார். 

பொதுத்துறை வங்கிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, கல்விக் கடன்களை திருப்பிச் செலுத்த வங்கிகளிடமிருந்து தாங்கமுடியாத அழுத்தம் காரணமாக மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லையென்று அமைச்சர் கூறினார். 

எழுத்துப்பூர்வ பதிலில், கல்விக் கடன்களை மீட்டெடுப்பதற்கான கட்டாயமற்ற வழிமுறைகளை பின்பற்ற வங்கிகள் தயாராக உள்ளன என்று கூறினார்.

மேலும், கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
More News