மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை: துணை சபாநாயகர்

கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கோவா, மும்பை.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை: துணை சபாநாயகர்

மனோகர் பாரிக்கரின் கேட்கும் திறன் சற்று குறைவடைந்துள்ளது என மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்


Panaji: 

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று, பிஜேபி-யின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ கூறியுள்ளார்.

மேலும், மனோகர் பாரிக்கர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அவருடைய கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் மனோகர் பாரிக்கரின் அரசியல் வட்டாரத்தின் நெருங்கிய நண்பர் மைக்கேல் லோபோ கூறியுள்ளார்.

மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில், முன்னேறம் ஏற்பட வேண்டுமென்று அனைவரும் பிராத்திப்பதாகவும், இருப்பினும் அவரின் உடல்நிலை இன்று வரை பழைய நிலையில் தான் உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................