“ஜம்மூ காஷ்மீரின் நிலையை எந்த அரசாலும் மாற்ற முடியாது!”- ஒருமித்தக் குரலில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் ஜோதிராத்யா சிந்தியா, ஜிதேந்திர ஹூடா, உள்ளிட்டோர், மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்தனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
“ஜம்மூ காஷ்மீரின் நிலையை எந்த அரசாலும் மாற்ற முடியாது!”- ஒருமித்தக் குரலில் காங்கிரஸ்

காங்கிரஸ் தரப்பு, “காஷ்மீர் விவகாரம் மிகவும் தான்தோன்றித்தனமாக, தன்னிச்சையாக, ஜனநாயக விரோதமாக கையாளப்பட்டதைக் கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்தது. 


New Delhi: 

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு காங்கிரஸ் தரப்பு, “இந்தியாவுடன் காஷ்மீர் ஒரு மாநிலமாக சேர்க்கப்பட்டது. எந்த அரசுக்கும் அதை மாற்ற அதிகாரம் கிடையாது” என்று கருத்து தெரிவித்துள்ளது. 

மேலும் காங்கிரஸ் தரப்பு, “காஷ்மீர் விவகாரம் மிகவும் தான்தோன்றித்தனமாக, தன்னிச்சையாக, ஜனநாயக விரோதமாக கையாளப்பட்டதைக் கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, “சட்டப் பிரிவு 370-ஐ திருத்த வேண்டுமென்றால் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கருத்து கேட்ட பின்னர், சட்ட சாசனத்துக்கு உட்பட்டுதான் மாற்றியமைக்க வேண்டும். எனவே அந்த மாநிலத்தைப் பிரிக்கவோ, யூனியன் பிரதேசமாக மாற்றவோ எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று கூறப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் ஜோதிராத்யா சிந்தியா, ஜிதேந்திர ஹூடா, உள்ளிட்டோர், மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ், தேசியவாத விவகாரத்தை சரியான முறையில் கையாளவில்லை என்றும் கட்சிக்குள்ளேயே சிலர் கருதியுள்ளதாக தகவல். இருப்பினும் காஷ்மீர் விவகாரம் கையாளப்பட்ட விதத்திற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

கடந்த திங்கட்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மற்றும் சிறப்பு அந்தஸ்து நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தபோது, காங்கிரஸ் கட்சி அதை எதிர்கொள்ளத் திணறியது. கட்சிக்கு சரியான தலைமை இல்லாத காரணத்தால், சில நிர்வாகிகள் கட்சியின் முடிவுக்கு எதிராகவும் செயல்பட்டுள்ளனர். 

பிரச்னையை மேலும் பெரிதாக்கும் வகையில் ராஜ்யசபாவில் இருந்த காங்கிரஸ் கொறடா, புபநேஷ்வர் கலிதா, தனது பதவியை ராஜினாமா செய்தார். காஷ்மீர் விவகாரத்தில் கட்சியின் முடிவுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியும், காஷ்மீர் குறித்த தனது நிலைப்பாட்டை ஒரு நாள் கழித்துதான் ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.  சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................