This Article is From Sep 03, 2019

மோட்டார் வாகனங்கள், பிஸ்கட் விற்பனையில் எந்த வீழ்ச்சியும் இல்லை: சுஷில் குமார் மோடி

ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். ஆனால், பீகாரில் வாகனங்களில் விற்பனையில் எந்த சரிவும் ஏற்படவில்லை.

மோட்டார் வாகனங்கள், பிஸ்கட் விற்பனையில் எந்த வீழ்ச்சியும் இல்லை: சுஷில் குமார் மோடி

பீகாரில் வாகனங்கள் மற்றும் பிஸ்கட் விற்பனையில் எந்த வீழ்ச்சியும் இல்லை என்று துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறுகிறார்

Patna:

பீகாரில் மோட்டார் வாகனங்கள், பிஸ்கட் விற்பனையில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை என அம்மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பாட்னாவில் வர்த்தகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பேசும் போது, சிலர் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். ஆனால், பீகாரில் வாகனங்களில் விற்பனையில் எந்த சரிவும் ஏற்படவில்லை. உண்மையில், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மாநிலத்தில் விற்பனை அதிகரித்துள்ளது.

"மக்கள் பிஸ்கட் வாங்குவதை நிறுத்திவிட்டதாக நான் ஒரு செய்தித்தாளில் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு பிராண்ட் பிஸ்கட்டின் விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும், பீகாரின் பிஸ்கட் உற்பத்தியாளர்களிடம் நான் பேசியபோது, மாநிலத்திலும், நாட்டிலும் விற்பனை அதிகரித்துள்ளது என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்”என்றார். 

பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக, எதிர்கட்சிகள் நாட்டில் பீதியை உருவாக்க முயற்சி செய்கிறது. பொருளாதாரத்தில் தொடர்ச்சியான "சுழற்சி" மந்தநிலையே ஏற்பட்டுள்ளது. 

"வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அந்த அரையாண்டில், பொருளாதாரத்தில் ஒரு சுழற்சி மந்தநிலை காணப்படுகிறது, ஆனால் இந்த முறை சில அரசியல் கட்சிகள் தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னர் தங்கள் விரக்தியை வெளிப்படுத்த அதன் மீது பெரும் சத்தத்தை உருவாக்குகின்றன,"  என்று அவர் ட்வீட்டரில் தெரிவித்திருந்தார்.

 

.