`மத்திய அரசிடமிருந்து உரிமைகளை பெறுவதில் சமரசம் கிடையாது!'- அமைச்சர் தங்கமணி

தமிழக அரசு, பாஜக-வின் கைப்பாவையாக இருக்கிறது என்கின்ற குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் தங்கமணி கருத்து தெரிவித்துள்ளார். 

`மத்திய அரசிடமிருந்து உரிமைகளை பெறுவதில் சமரசம் கிடையாது!'- அமைச்சர் தங்கமணி

TN Minister Thangamani

ஹைலைட்ஸ்

  • சட்டமன்றத்தில் இது குறித்து பேசியுள்ளார் தங்கமணி
  • பாஜக-வின் கைப்பாவையாக அதிமுக இருக்கிறது என்பதற்கு பதில்
  • நிலக்கரி வாங்குவதில் சமரசமின்மை குறித்து பேசியுள்ளார் தங்கமணி

தமிழக அரசு, பாஜக-வின் கைப்பாவையாக இருக்கிறது என்கின்ற குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் தங்கமணி கருத்து தெரிவித்துள்ளார். 

அதிமுக-வின் பொதுச் செயலளாராக இருந்த ஜெயலலிதா, மறைந்த பின்னர் அந்தக் கட்சியை பாஜக ஆட்டுவித்துக் கொண்டுள்ளது என்று திமுக உள்ளிட்ட பலர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, `மாநிலத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மின் துறையைப் பொறுத்த வரையில் கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, தமிழகம் மின்சாரத் துறையில் தன்னிறைவு பெறும் என்று தெரிவித்தது. அதைப் போலே, 2015 ஆம் ஆண்டு, மின்சாரத்தின்ல தன்னிறைவு பெற்ற மாநிலமாக, தமிழகத்தை மாற்றிக் காட்டினோம். 

இப்போதும், தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின் தேவை இருக்கிறது. குறிப்பாக அனல் மின் நிலையங்கள் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசிடமிருந்து பெறுவதில் எந்த சமரசமும் இதுவரை செய்யப்படவில்லை. நமக்குத் தேவையான நிலக்கரி அளவை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. மத்திய அரசுக்கு பொதுமான அழுத்தம் கொடுத்ததால், மின்சார உற்பத்தி சீராக இருக்கின்றது. பலர் கூறுவது போல, தமிழக அரசு, மத்திய அரசின் பிடியில் இல்லை' என்றார்.

 (इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)