’5 ஸ்டார் வசதிகள் தேவையில்லை.. என்னால் தெருவிலும் தூங்க முடியும்’: குமாரசாமி

கிராமங்களில் சொகுசு வசதிகள் ஏற்படுத்திக்கொள்வதாக குமாரசாமி மீது விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, அதனை சரிகட்டும் விதமாக இவ்வாறு நடந்துக்கொண்டுள்ளார்.

’5 ஸ்டார் வசதிகள் தேவையில்லை.. என்னால் தெருவிலும் தூங்க முடியும்’: குமாரசாமி

தரையில் படுத்து தூங்குவதை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Yadgir, Karnataka:

கர்நாடகா முதல்வர் குமாரசாமி 'கிராம வாஸ்தவ்யா 2.0' என்ற தன்னுடைய கிராமங்களில் தங்குதல் திட்டத்தை நேற்று யாத்கிர் மாவட்டம் குர்மித்காலில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளார். இதனிடையே, 5 நட்சத்திர வசதிகளை பெறுவதாக தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதலளிக்கும் விதமாக தன்னால் தெருவிலும் படுத்து தூங்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சாந்திராகி கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி கூறியதாவது, எதிர்கட்சியினரிடம் கேட்க வேண்டும், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் என்னால், ஒவ்வொரு நாளும் எவ்வாறு வேலை செய்ய முடியும்? ஒரு சின்ன குளியலறை மட்டும் கட்டப்பட்டிக்கிறது. அதையும், நான் எனது வீட்டுக்கு கொண்டு செல்லப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் 'கிராம வாஸ்தவ்யா 2.0' கிராமங்களில் தங்குதல் என்ற திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்வர் குமாரசாமி, கலாபுராகி மாவட்டம் அப்சல்பூர் தாலுக்கா யாத்கிர் அருகே உள்ள சந்திராகி கிராமத்தில் தங்கினார்.

அங்கு குமாரசாமி தங்குவதற்காக புதிதாக ஒரு குளியலறை அமைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. கிராமத்தில் தங்கினாலும், குமாரசாமிக்கு 5 நட்சத்திர வசதிகள் செய்து தரப்பட்டதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, இந்த குளியலறை சிறுவர்களுக்கு உதவும் என்றார். நான் இந்த கிராமத்திற்கு சாதாரண பேருந்திலே வந்தடைந்தேன். பாஜகவிடம் இருந்த நான் எதுவும் கற்றுக்கொள்ள தேவையில்லை. நான் குடிசையிலும் தங்கியிருக்கிறேன், அதேநேரத்தில், 5 ஸ்டார் ஹோட்டல்களிலும் தங்கியிருக்கிறேன். எனது தந்தை பிரதமராக இருந்தபோது, ரஷ்யாவில் உள்ள கிராண் கிரெம்லின் அரண்மனையிலே தங்கியிருக்கிறேன் என்றார்.

மேலும், கடன் தள்ளுபடி குறித்த விரிவான தகவல்கள் உள்ளன. இதற்காக கலாபுராகி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சுமார் ரூ.100 கோடி வழங்கப்படும். விவசாயிகளுக்க வழங்கப்படும் கடன் குறித்து கூட்டுறவு அமைச்சரால் முடிவு எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடிய அவர், குழந்தைகளுடனே இரவு உணவை உட்கொண்டார்.