ராமர் கோவில், முத்தலாக் குறித்து எந்த கருத்தும் இல்லை: நிதிஷ் குமார்

ஐக்கிய ஜனதா தளத்திற்கு எவ்வித கருத்தும் இல்லை என பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்

ராமர் கோவில், முத்தலாக் குறித்து எந்த கருத்தும் இல்லை: நிதிஷ் குமார்
Patna:

ராமர் கோவில் மற்றும் முத்தலாக் சர்ச்சைகள் குறித்து ஐக்கிய ஜனதா தளத்திற்கு எவ்வித கருத்தும் இல்லை என பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.  

2019 ஆம் ஆண்டிற்கான தனது முதல் மாநில பொதுக்கூட்டத்தை முடித்த பின் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரான கேசி தியாகியும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்தும், முத்தலாக் விவகாரம் குறித்தும் கட்சியின் சார்பாக எந்த கருத்தும் இல்லை என்பதை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார், ராமர் கோவில் மற்றும் முத்தலாக் சர்ச்சைகள் குறித்து ஐக்கிய ஜனதா தளத்திற்கு எவ்வித கருத்தும் இல்லை.

இந்த சர்ச்சைக்குரிய இரண்டு விவகாரங்களுக்கும் தீர யோசித்து, அமைதியான வழியிலே தீர்வு காண வேண்டும் என்பதை பதிவு செய்தார். மேலும், அரசியல் அமைப்பு சட்டத்தின் படியே இந்த நாடு இயங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். 

ரஃபேல் போர் விமான விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, அந்த பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு தெளிவான தீர்வை வழங்கிவிட்டது என்றும் அடுத்த நாடாளுமன்ற பொது தேர்தலில் நரேந்திர மோடியே பிரதமராக வர வேண்டும் என்று நிதிஷ் குமார் தெரிவித்தார்.

More News