This Article is From Apr 04, 2020

மக்களுக்கு எளிதில் கிடைக்க சானிட்டைசர் தயாரிப்பில் இறங்கிய வேதியியல் துறை மாணவர்கள்!!

மக்கள் அதிகளவு உபயோகிப்பதன் காரணமாக சானிட்டைசர்களுக்கு பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது. இதையடுத்து வேதியியல் துறை மாணவர்களும், ஆசிரியர்களும் சானிட்டைசர் தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.

மக்களுக்கு எளிதில் கிடைக்க சானிட்டைசர் தயாரிப்பில் இறங்கிய வேதியியல் துறை மாணவர்கள்!!

நாட்டின் பல்வேறு இடங்களில் சானிட்டைசருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • மக்கள் அதிகளவு பயன்படுத்துவதால் சானிட்டைசருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
  • கர்நாடக கல்லூரி மாணவர்கள் சானிட்டைசர் தயாரிப்பில் இறங்கியுள்ளனர்
  • 5 ஆயிரம் பாட்டில் சானிட்டைசர்கள் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
Mangaluru:

தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் சானிட்டைசர் தயாரிப்பில் கல்வி நிறுவனங்களில் வேதியியல் துறை மாணவர்களும், பேராசிரியர்களும் இறங்கியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுப்பதற்கு ஒவ்வொருவரும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவசர பணிகளால் வெளியே செல்வோர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்போருக்கு சோப்பு போட்டு கை கழுவுவது நடைமுறைக்கு சாத்தியமாகாத விஷயம். 

இதனால் அவர்கள் சானிட்டைசர்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக் கொள்கின்றனர். கொரோனா பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து, சானிட்டைசர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதனை சில நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதித்துள்ளன.

இருப்பினும் அதிக பயன்பாட்டின் காரணமாக சானிட்டைசர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையல் கர்நாடகாவின் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (NIT) வேதியியல் துறை மாணவர்கள், பேராசிரியர்கள், சானிட்டைசர் தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.

இதற்கான மூலப்பொருட்களை என்.ஐ.டி. நிர்வாகம் வழங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி 70 மில்லி கொண்ட, 5 ஆயிரம் சானிட்டைசர் பாட்டில்களை மாணவர்கள் தயாரிக்கவுள்ளனர். 

ஏற்கனவே மாணவர்கள் தயாரித்த சானிட்டைசர்கள் காவல்நிலையம், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

சானிட்டைசர் பயன்படுத்தினால்தான் கைகளில் கொரோனா வைரஸ்களை அழிக்க முடியும் என்ற விதி ஏதும் கிடையாது. வாய்ப்புள்ளவர்கள் சோப்புகளால் கைகளை 20 வினாடிகளுக்கு கழுவியோ, அல்லது சானிட்டைசரை பயன்படுத்தியோ தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

.