This Article is From Oct 18, 2019

‘நடந்ததை சொல்லணும்ல…’- Manmohan Singh-க்கு Nirmala Sitaraman நெத்தியடி!

Nirmala Sitharaman - ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடன் வாங்கிவிட்டு நாட்டைவிட்டு தப்பிச் சென்றவர்களுக்கு எதிராக தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

‘நடந்ததை சொல்லணும்ல…’- Manmohan Singh-க்கு Nirmala Sitaraman நெத்தியடி!

Nirmala Sitharaman - ஒரு ஆட்சியில் என்னவெல்லாம் தவறாக நடந்தது என்பது குறித்து பேசுவது மிகவும் அவசியமானது. 

ஹைலைட்ஸ்

  • முன்னதாக மன்மோகன் சிங், மத்திய அரசை சாடியிருந்தார்
  • மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து கேள்வியெழுப்பினார் மன்மோகன்
  • Manmohan Singh - குறை சொல்வதில்தான் மத்திய அரசின் கவனம் உள்ளது
New Delhi:

நாட்டின் பொருளாதாரம் (Economy) குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (Manmohan Singh), கருத்து கூறியிருந்த நிலையில், அதற்கு மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman). முன்னதாக மன்மோகன் சிங், “பொறுப்பில் இருக்கும் மத்திய அரசு, பொருளாதார மந்தநிலைக்கு எதிர்க்கட்சியைக் குற்றம் சொல்வதிலேயே குறியாக இருக்கிறது” என்றார். அதற்கு நிர்மலா சீதாராமன், “ஒரு ஆட்சியில் என்னவெல்லாம் தவறாக நடந்தது என்பது குறித்து பேசுவது மிகவும் அவசியமானது” என்று கூறியுள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் மன்மோகன், “நிர்மலா சீதாராமன் சொன்னது பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால், பொருளாதாரத்தை சீர் செய்ய வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அதன் சரியான நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், தற்போது இருக்கும் பொருளாதாரப் பிரச்னைக்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறது மத்திய அரசு. ஆகவேதான், அதை சரிசெய்ய இவர்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.

நான் பிரதமராக இருந்தபோது சில விஷயங்கள் நடந்தனதான். அப்போது சில சறுக்கல்கள் இருந்தன. ஆனால், எல்லாவற்றுக்கும் காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் என்று சொல்ல முடியாது. நீங்கள் 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்கள். அனைத்தையும் ஐ.மு.கூ ஆட்சி மீதே சுமத்த முடியாது” என்று பொங்கியுள்ளார். 

இதற்கு அமைச்சர் நிர்மலா, “குறை சொல்வதில் எந்தப் பயனும் இல்லை என்று மன்மோகன் சிங் சொல்வதை நான் மதிக்கிறேன். ஒரு ஆட்சியில் என்னவெல்லாம் தவறாக நடந்தது என்பது குறித்து பேசுவது மிகவும் அவசியமானது. 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடன் வாங்கிவிட்டு நாட்டைவிட்டு தப்பிச் சென்றவர்களுக்கு எதிராக தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

எங்கள் ஆட்சியில் எந்தத் தவறும் ஊழலும் நடந்தது கிடையாது. அதேபோல நாங்கள் கள்ள முதலாளிகளுக்குக் கடன் கொடுத்தது கிடையாது. ஐமுகூ ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் சம்பவங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அப்படியொரு சம்பவமே நடந்தது இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்” என்று பதிலடி கொடுத்துள்ளார். 

.