அரசு புதிய சீர்திருத்ததிற்கு தயாராக உள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு துறையில் சுமார் ரூ. 100 லட்சம்கோடி முதலீடு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

அரசு புதிய சீர்திருத்ததிற்கு தயாராக உள்ளது  - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கார்ப்பரேட் வரியை குறைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது

New Delhi:

இந்தியாவை மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கான கூடுதல் சீர்திருத்தங்களுக்கு அரசாங்க்ம் தயாராக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

கார்ப்பரேட் வரியை குறைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்று டெல்லியில் நடந்த இந்தியா-ஸ்வீடன் வர்த்தக உச்சி மாநாட்டில் தெரிவித்தார். 

“வங்கி, சுரங்கம் அல்லது காப்பீடு போன்ற பல்வேறு துறைகளில் மேலும் சீர்திருத்தங்களுக்கு இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. சீர்திருத்த நடவடிக்கைகளுக்கே அழைப்பு விடுத்துள்ளேன்” என்று கூறினார். 

உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு செய்ய ஸ்வீடிஷ் நிறுவனங்களை அழைத்தார். அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு துறையில் சுமார் ரூ. 100 லட்சம்கோடி முதலீடு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. 

More News