This Article is From Jun 27, 2019

இன்னும் ஒருசில நாட்களில் பட்ஜெட்: மன்மோகனை சிங்கை சந்தித்த நிர்மலா சீதாராமன்!

ராணுவத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு இந்த முறை நிதி அமைச்சராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது

இன்னும் ஒருசில நாட்களில் பட்ஜெட்: மன்மோகனை சிங்கை சந்தித்த நிர்மலா சீதாராமன்!

நாட்டில் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதால், நிர்மலா சீதாராமனுக்கு ஏகப்பட்ட சவால்கள் காத்திருக்கின்றன.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் அமைந்துள்ள அரசு, தனது முதல் பட்ஜெட்டை வரும் ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப் போகும் முதல் பட்ஜெட் இது. இந்நிலைநில் அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சென்று சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள மன்மோகன் இல்லத்துக்கு இன்று சென்றுள்ளார் நிர்மலா சீதாரமன்.

1991 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் தலைமையில் அமைந்திருந்த மத்திய அரசில், நிதி அமைச்சராக செயலாற்றியவர் மன்மோகன் சிங். அவர் அப்போது கொண்டு வந்த பல பொருளாதார திட்டங்கள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய நிர்மலா சீதாராமன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதே நேரத்தில் அவருக்கு நெருக்கமாக இருக்கும் வட்டாரங்கள், ‘மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது. நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து, மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்' என்று தகவல் கூறுகின்றன. 

இந்த மாதத் தொடக்கத்தில் மன்மோன் சிங்கின், ராஜ்யசபா பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. கடந்த 30 ஆண்டுகளாக அவர் ராஜ்யசபாவில் உறுப்பினராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதை வைத்துப் பார்க்கும்போது, வெகு நாள் கழித்து மன்மோகன் சிங் இல்லாத அவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சென்ற ஆண்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய மன்மோகன் சிங், “நான் ஒரு விபத்தால் பிரதமர் ஆனேன் என்று கூறுகிறார்கள். நான் நிதி அமைச்சராக பொறுப்பேற்றது கூட விபத்துதான்“ என்று கலகலப்பாக பேசினார். 

இந்திய வரலாற்றில் முதன்முறையாக முழு நேர பெண் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பெருமை நிர்மலா சீதாராமனையே சேரும். இதற்கு முன்னர் பிரதமர் இந்திரா காந்தி, நிதி அமைச்சராக இருந்தார். ஆனால், அவர் அதை கூடுதல் இலாகாவாக வைத்திருந்தார். 

ராணுவத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு இந்த முறை நிதி அமைச்சராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதால், நிர்மலா சீதாராமனுக்கு ஏகப்பட்ட சவால்கள் காத்திருக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தற்போது மீண்டும் புதிய அரசு பதவியேற்றுள்ளதைத் தொடர்ந்து 2019-2020 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னர் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை மன்மோகன் சிங், “தேர்தல் பட்ஜெட்” என்று கூறினார்.

.