This Article is From Jan 21, 2020

Nirbhaya Case: உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்த குற்றவாளி..!

Nirbhaya Case: இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள். அவர்களில் ராம் சிங் என்பவர் திகார் சிறையில் விசாரணையின்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Nirbhaya Case: உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்த குற்றவாளி..!

Nirbhaya Case: இதைப் போன்று பவண் குப்தா, முன்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

New Delhi:

Nirbhaya Case: நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், குற்றவாளிகள் 4 பேரில் ஒருவர், உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடியுள்ளார். குற்றம் நடந்தபோது தான் ஒரு சிறுவன் என்று தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் பவண் குப்தா என்கிற குற்றவாளி, மனு தாக்கல் செய்துள்ளார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக குற்றவாளிகள் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலட ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குற்றவாளிகளில் ஒருவர், ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பினார். அது நிராகரிக்கப்பட்டு, தற்போது தண்டனை தேதி மாற்றப்பட்டுள்ளது. 

2012 டிசம்பரில் மருத்துவ மாணவி நிர்பயா, டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே தள்ளி விடப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. உடனடியாக வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகளின் தண்டனை உறுதி செய்யப்பட்டு, தூக்கிலிடும் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்னர் புதிய சிக்கல் ஏற்பட்டது. ஜனவரி 22 புதன்கிழமை காலை 7 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி வைத்தார்.  இதற்கிடையே, குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக டெல்லி அரசு, குற்றவாளிகளுக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்தது. கருணை மனு காரணமாக குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றப்படுவது 14 நாட்கள் வரையில் தள்ளிப் போகலாம் எனத் தகவல்கள் வெளிவந்தன.

இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள். அவர்களில் ராம் சிங் என்பவர் திகார் சிறையில் விசாரணையின்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் ஆவார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது மீதமுள்ள முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்‌ஷய் தாக்கூர் மற்றும் பவண் குப்தா ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 1 காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று புதிய உத்தரவு வெளிவந்துள்ளது.

இப்போது வழக்கில் மேலும் ஒரு சிக்கலாக, பவண் குப்தா, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “சம்பவம் நடந்தபோது நான் சிறுவனாக இருந்தேன். ஆகவே, சிறார்களுக்கான சட்டப்படிதான் நான் தண்டிக்கப்பட வேண்டும். என் வயதை மதிப்பிட சரியான மருத்துவ சோதனைகள் செய்யப்படவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் போன்று பவண் குப்தா, முன்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

.