"என் மகளின் புகைப்படத்தை ஆரத்தழுவிக் கொண்டேன்" - நிர்பயாவின் தாய் ஆஷா தேவி

நீதிக்கான எங்கள் காத்திருப்பு வேதனையாக இருந்தது, ஆனால் இறுதியாக எங்களுக்கு நீதி கிடைத்தது

"என் மகளின் புகைப்படத்தை ஆரத்தழுவிக் கொண்டேன்"

ஹைலைட்ஸ்

  • நான்கு குற்றவாளிகள் ஒரே நேரத்தில் தூக்கிலப்பட்டது இதுவே முதல்முறை
  • நீதித்துறைக்கும், அரசுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்
  • இன்று அதிகாலை டெல்லி திகார் ஜெயிலில் தூக்கிலடப்பட்ட
New Delhi:

கடந்த ஏழு வருடமாக நீதிக்கான எங்கள் காத்திருப்பு வேதனையை அளித்தது, ஆனால் இறுதியாக இன்று நாங்கள் அந்த நீதியைப் பெற்றுவிட்டோம் என்று நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் பேருந்தில் வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம் டாக்டரின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை, இன்று அதிகாலை டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அந்த பெண்ணின் தாய் "இந்தியாவின் மகள்களுக்கான, அவர்களின் நீதிக்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடருவோம் என்று கூறினார். மேலும் இன்று எனது மக்களின் புகைப்படத்தை நான் ஆரத்தழுவிக் கொண்டேன் என்று கூறினார். 

அக்‌ஷய் தாக்கூர் வயது 31, பவன் குப்தா வயது 25, வினய் சர்மா வயது 26, மற்றும் முகேஷ் சிங் வயது 32, ஆகியோர் இன்று அதிகாலை திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். இந்திய வரலாற்றில் நான்கு குற்றவாளிகள் ஒரே நேரத்தில் தூக்கிடப்பட்டது இதுவே முதல்முறை. "இந்த நிகழ்விற்காக நீதித்துறைக்கும், அரசுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன் என்று நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறினார்.

தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக, நள்ளிரவு நடந்த விசாரணையில், உச்சநீதிமன்றம் குற்றவாளிகளின் இறுதி மனுவைத் தள்ளுபடி செய்து. இந்த தேசத்தையே திருப்பிப்போட்ட இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. குற்றவாளிகள் நான்கு பேரும் அன்று இரவு முழுவதும் சாப்பிட மறுத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறை முழுமையும் இரவு முழுவதும் பூட்டப்பட்டு இருந்ததாகவும், அதிகாலை 3:30 மணியளவில் குற்றவாளிகள் தங்கள் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற நான்கு பேரும் கடந்த சில மாதங்களாகப் பல மனுக்களை தாக்கல் செய்தனர். "அவர்களை இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அனுப்புங்கள், அவர்களை டோக்லாமுக்கு அனுப்புங்கள், ஆனால் அவர்களைத் தூக்கிலிட வேண்டாம்" என்று குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் தாக்கூரின் வழக்கறிஞர் கெஞ்சினார். இருப்பினும் "நாங்கள் அனைவரும் இந்த நாளுக்காகத் தான் இத்தனை நாள் காத்திருந்தோம் என்று நிர்பயாவின் தாய் கூறினார்.

இன்றைய விடியல் ஒரு புதிய விடியலாக இருந்தது, ஏனெனில் என் மகளுக்கு நீதி கிடைத்திருக்கிறது, இது என்னுடைய எல்லா இந்திய மகள்களுக்கும் ஒரு புதிய விடியலாக இருக்கும்" என்றும். "இனி என் மகளின் ஆத்மா நிம்மதியாக இருக்கும் என்றும்" ஆஷா தேவி கூறினார்.