கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், லண்டன் வீதியில் கூலாக சுற்றிய நீரவ் மோடி!!

லண்டனில் உள்ள நீரவ் மோடியின் சென்டர் பாயின்ட் ஹோம் அருகே, உணவகம் ஒன்றுக்கு நீரவ் மோடி வந்து சென்றார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், லண்டன் வீதியில் கூலாக சுற்றிய நீரவ் மோடி!!

அடுத்த சில நாட்களில் நீரவ் மோடி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.


London: 

கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், லண்டன் வீதியில் நீரவ் மோடி கூலாக சுற்றித் திரிகிறார். அவர் இன்னும் சில நாட்களில் கைதாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

லண்டனில் தனது வீடு அமைந்திருக்கும் சென்டர் பாயின்ட் அருகேயுள்ள உணவகம் ஒன்றுக்கு நீரவ் மோடி இன்று வந்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டபோது 'நோ கமென்ட்ஸ்' என்று மட்டுமே பதில் அளித்தார். 

இந்திய வங்கிகளில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று மோசடி செய்ததாக நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்ஸி மீது புகார் உள்ளது. அவர்களில் நீரவ் மோடி லண்டன் தப்பித்து சென்று விட்டார். 

அவரை இந்திய கொண்டு வரும் முயற்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவரை கைது செய்வதற்கான வாரன்ட்டை லண்டன் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் இன்னும் சில நாட்களில் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நீரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்த மாத தொடக்கத்தில் லண்டன் வீதியில் படு கூலாக நீரவ் மோடி சுற்றித் திரிந்தார். இதனை வீடியோவாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று வெளியிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................