This Article is From Mar 19, 2019

நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்ததாக தகவல்

பஞ்சாப் வங்கியில் கடன் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்ஸி மீது புகார் உள்ளது.

நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்ததாக தகவல்

Nirav Modi: இன்னும் சில நாட்களில் நீரவ் மோடி எந்த நேரத்திலும் கைதாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

New Delhi/London:

இந்திய வங்கிகளில் மோசடி செய்ததாக புகாருக்கு ஆளாகியிருக்கும் நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் கைது வாரன்ட்டை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம்  கோடி அளவுக்கு கடன் பெற்று விட்டு மோசடி செய்ததாக, நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது புகார்  உள்ளது. இந்த கடனை பெற்றுவிட்டு வெளிநாடுகளில் சொத்து வாங்கியதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. 

சமீபத்தில் வெளியான வீடியோவின்படி நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் செய்தி நிறுவனமான தி டெலிகிராஃப் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரூ. 75 கோடி அபார்ட்மென்ட்டில் நீரவ் மோடி லண்டனில் வசித்து வருகிறார். 

அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அவரை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் கைது வாரன்ட்டை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் கைதானதைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.