9 வயதுச் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; காஷ்மீரில் கொடூரம்!

இதுவரை போலீஸ் தரப்பில் கொல்லப்பட்டக் குழந்தையின் இரண்டாவது தாய் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
Srinagar: 

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி தனது உறவினர் மற்றும் அவரது நண்பர்களாலேயே கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சந்தேகப்படுகிறது. 

கொல்லப்பட்டக் குழந்தையின் கண்கள் நோண்டி எடுக்கப்பட்டும், அவரது உடலை அமிலம் கொண்டு பொசுக்கப்பட்டும், உரி அருகில் இருக்கும் காட்டுப் பகுதியில் வீசப்பட்டுள்ளதாக போலீஸ் கூறுகிறது.

இதுவரை போலீஸ் தரப்பில் கொல்லப்பட்டக் குழந்தையின் இரண்டாவது தாய் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்து போலீஸ் அதிகாரி இம்தியாஸ் ஹுசேன், ‘சம்பவம் குறித்து தெரிய வந்தவுடன் நாங்கள் விசாரணையை ஆரம்பித்துவிட்டோம். சிறுமியின் இரண்டாவது தாய், தனது கணவரின் முதல் மனைவி மற்றும் குழந்தையின் மீது வெறுப்புடன் இருந்துள்ளதாக தெரிகிறது. விசாரணையின் போது, அந்தப் பெண், தனது கணவர் முதல் மனைவியுடனும் அவரின் குழந்தையுடனும் தான் அதிக நேரம் செலவிடுவார் என்று கூறினார். 

அதை வைத்துப் பார்த்த போது இரண்டாவது தாய், தனது 14 வயது சொந்த மகனை வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார் என்பது தெரிகிறது. மகனின் நண்பர்களையும் வர வழைத்து சிறுமியை பலாத்காரம் செய்யச் சொல்லி இருக்கிறார் அந்தப் பெண். இதையடுத்து சிறுமியின் கழுத்தை அந்தப் பெண் நெறிக்க, அவரின் மகன் கொடரியால் சிறுமியை வெட்டிக் கொலை செய்துள்ளான். தொடர்ந்து, சிறுமியின் கண்ணைத் நோண்டி எடுத்து, அதில் அமிலத்தை உற்றியுள்ளான் 19 வயதான இன்னொரு நபர். பிறகு சிறுமியின் உடலை காட்டுப் பகுதியில் வீசியுள்ளனர்’ என்று கூறியுள்ளார். 

குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக மிக உறுதியான ஆதாரங்களை காவல் துறை திரட்டி வருகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................