This Article is From Jun 28, 2018

நேய்மர் வெற்றி! உற்சாக கொண்டாடத்தில் அவரின் சகோதரிக்கு காயம்

பின்னர் சமூக வலைத்தளத்தில் தனது இடது கையில் கட்டு அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

நேய்மர் வெற்றி! உற்சாக கொண்டாடத்தில் அவரின் சகோதரிக்கு காயம்

As you know I celebrated the last victory so much that even I injured myself, she wrote.

நேய்மர் கோஸ்டா ரிகாவிற்கு எதிரான  ஆட்டத்தின் முடிவில் தந்திரமாக கோல் அடித்தார். பிரேசில் ஆரவாரத்துடன் வெற்றியை கொண்டாடியது. சூப்பர் ஸ்டார் ஸ்ரைக்கர் நேய்மர் ஆடுகளத்தில் அழுகையுடன் வெற்றியை கொண்டாடினார்‌ .கொண்டாட்டத்தில் நேய்மரின் சகோதரிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. 

ரஃப்பெல்லா சான்டோஸ் நேய்மரின் சகோதரி அவரது அண்ணனின் ஆட்டத்தை உற்சாகத்துடன் பார்த்து கொண்டிருந்தார் அப்போது வெற்றி பெற்று ஆர்பரிப்பில் எதிரே இருந்த நண்பர் மீது மோதியதில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது என புதன்கிழமை ஒரு பிரேசில் டிவி கூறியது.

பின்னர் சமூக வலைத்தளத்தில் தனது இடது கையில் கட்டு அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். 

பிரேசில் 2-0 என்று வெற்றி பெற்ற இறுதி கட்ட விசிலுக்கு முன்பாக , உலகிலேயே விலை மதிப்பு மிக்க வீரரான நேய்மர் கோல் அடித்த பிறகு ஆடுகளத்தில் மண்டியிட்டு கத்தினார். இதுவரை ரஷ்யாவில் ஆடிய போட்டிகளில் நேய்மர் சரியாக ஆடாததால் அனைவராலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். 

காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவை சிகிச்சைக்கு பிறகு பல சிரமங்களுக்கு இடையில் இப்போட்டியில் பங்கேற்றார்.

Click for more trending news