திருவள்ளூரில் புதிய மருத்துவக்கல்லூரி: முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம்.பி!

திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் 321 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

திருவள்ளூரில் புதிய மருத்துவக்கல்லூரி: முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம்.பி!

திருவள்ளூரில் புதிய மருத்துவக்கல்லூரி: முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம்.பி ஜெயக்குமார்

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைத்திட மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் நன்றி தெரிவித்தார். 

தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இவை தவிர்த்து, தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க தமிழக அரசு மத்திய அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு கேட்டிருந்த 9 மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. 

இதன் தொடர்ச்சியாக திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளது. தொடர்ந்து, வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலமைச்சர் அடுத்தடுத்து அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்கான பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில், திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் 321 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைத்திட மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.ஜெயக்குமார் நன்றி தெரிவித்தார். 

Listen to the latest songs, only on JioSaavn.com