2 யூனியன் பிரதேசங்களாக மாறிய ஜம்மு காஷ்மீர்! இந்தியாவுக்கு இனி புதிய மேப்!!

தனது வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலத்தை இழந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 புதிய யூனியன் பிரதேசங்களை ஏற்படுத்திக் கொள்கிறது இந்தியா.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் பறிக்கப்பட்டது.

New Delhi:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் மேப்பை மாற்றி அமைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், 2 நாட்களுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்கள் அதிகாரப்பூர்வமாக உருவாகின.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு துணை நிலை கவர்னராக கிரிஷ் சந்திரா முர்மு நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசின் செலவுக்கணக்கு பிரிவின் செயலராக இருந்தவர். இதேபோன்று லடாக் யூனியன் பிரதேசத்திற்கு பாதுகாப்புத்துறை முன்னாள் செயலர் ராதா கிருஷ்ண மாத்தூர் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவின் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும். லடாக் மற்றும் லே மாவட்டங்களை தவிர்த்து ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே இருந்த மாநிங்கள் அனைத்தும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும்.

.

94j1vit8

லடாக் யூனியன் பிரதேசத்தின் வரைபடம் (MAP) 

This is the new Union Territory of Ladakh.

kol3jn9k

லடாக் மற்றும் லே மாவட்டங்களை உள்ளடக்கியதாக லடாக் யூனியன் பிரதேசம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1947-ல் ஏற்படுத்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கத்துவா, ஜம்மு, உதம்பூர், ரியாஸி, அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முசாபராபாத், லே, டலாக், கில்ஜித், கில்ஜித் வசாரத், சில்லாஸ் மற்றும் மலைப்பகுதி என மொத்தம் 14 மாவட்டங்கள் இருந்தன.

சர்தால் வல்லபாய் படேலில் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் கடந்த வியாழன் முதற்கொண்டுசெயல்பாட்டிற்கு வந்தன. இதனால் 29 மாநிலங்கள் என்ற நிலையில் இருந்து 28 மாநிலங்களாக இந்தியா குறைந்திருக்கிறது.

சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்டது. இதனால் பின் விளைவுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக காஷ்மீர் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

50 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, தொலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. நிலைமை முழுமையாக சீரடைந்த பின்னர் கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

More News