“எங்களை அடக்க முடியாது..!”- Celebrities மீது தேசத்துரோக வழக்கு- கொதித்தெழும் கலைத் துறையினர்!

sedition case - 180 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்...

“எங்களை அடக்க முடியாது..!”- Celebrities மீது தேசத்துரோக வழக்கு- கொதித்தெழும் கலைத் துறையினர்!

முன்னதாக, திரைப்பட இயக்குநர் மணி ரத்னம், பாலிவுட் திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், ஷியாம் பெனகல், நடிகை சுமித்ரா சேட்டர்ஜி, சுபா முத்கல் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள்.

Mumbai:

மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்திற்காக 49 பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆதரவாக 180 பிரபலங்கள் மீண்டும் குரல் கொடுத்துள்ளனர். அதில் பிரபல பாலிவுட் நடிகர் நசருதீன் ஷா, வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் உள்ளிட்டோரும் அடங்குவார்கள். 

180 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நம் நாட்டில் நடக்கும் கூட்டு வன்முறைக்கு எதிராக பொறுப்புள்ள குடிமகன்களாக குரலெழுப்பிய காரணத்திற்காக எங்கள் கலைத் துறையைச் சேர்ந்த 49 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தைப் பயன்படுத்தி, குடிமக்களின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.” என்று குறிப்பிட்டுள்ளனர். 

முன்னதாக, திரைப்பட இயக்குநர் மணி ரத்னம், பாலிவுட் திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், ஷியாம் பெனகல், நடிகை சுமித்ரா சேட்டர்ஜி, சுபா முத்கல் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர்கள் எழுதிய கடிதத்தில், “முஸ்லிம்களுக்கு, தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டு வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எதிர் கருத்து இல்லாமல் ஜனநாயகம் இல்லை. ஜெய் ஸ்ரீ ராம் என்கிற கோஷம், வன்முறையைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதற்கு சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் பிகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர், 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். தற்போது மாஜிஸ்த்ரேட் சூர்ய காந்த், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். 

இதைத் தொடர்ந்து தற்போது தேசத் துரோகம், பொது அமைதியைக் குலைத்தல், மத உணர்வைப் புண்படுத்துதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

More News