பட்ஜெட் 2019: விரைவில் வருகிறது ரூ.20 நாணயம்: நிர்மலா அறிவிப்பு

ரூ.10 நாணயம் வெளிவந்து சரியாக பத்து வருடங்கள் கழித்து புதிய நாணயங்களை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பட்ஜெட் 2019: விரைவில் வருகிறது ரூ.20 நாணயம்: நிர்மலா அறிவிப்பு

மார்ச் 7 ஆம் தேதி புதிய நாணயங்களை வெளியிட உள்ளதாக பிரதமர் அறிவித்திருந்தார்.

New Delhi: 

புதிதாக 1,2,5,10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை விரைவில் வெளியிட உள்ளதாக நாடாளுமன்ற பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பார்வையற்றோரும் தெரிந்து கொள்ளும் வகையில், ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 உள்ளிட்ட வகைகளில் புதிய நாணயங்களை வெளியிட உள்ளதாக தெரிவித்த அவர், இந்த புதிய நாணயங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.20 நாணயமானது 12 முனை கொண்ட பாலிகான் அல்லது டோட்கேகன் வடிவிலும் காப்பர், சின்க் மற்றும் நிக்கல் ஆகியவற்றாலும் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தில் சிங்க தலையுடன் கூடிய அசோகா தூண் மற்றும் அதன்கீழ் சத்யமேவ ஜெயதே ஆகியவை பொறிக்கப்பட்டு இருக்கும். இதில் பாரத் என இந்தியிலும், இந்தியா என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும் என தெரிவித்து உள்ளது.

ரூ.10 நாணயம் வெளிவந்து சரியாக பத்து வருடங்கள் கழித்து புதிய நாணயங்களை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 நாணயங்கள மட்டும் 13 வகைகளில் வெளிவந்த நிலையில், மக்களிடம் அது குழுப்பத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலான வணிகர்கள், சில்லரை வியாபாரிகள் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................