பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்த புதிய ராணுவத் தளபதி!

Army Chief General MM Naravane - 'பாகிஸ்தான் ராணுவத்தின், தீவிரவாத ஊக்குவிப்பு என்பது முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது'

பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்த புதிய ராணுவத் தளபதி!

Army Chief General MM Naravane - 'சீன எல்லையிலும் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'

New Delhi:

இந்தியாவின் புதிய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார் ஜெனரல் எம்எம் நரவானே. பதவியேற்ற முதல் நாளிலேயே அவர், பாகிஸ்தான் தரப்புக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். “தீவிரவாதத்தின் ஊற்றாக செயல்படும் இடத்தில் நாங்கள் தாக்குல் நடத்த முழு அதிகாரமும் உள்ளது. பாகிஸ்தானின் துணை கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு எந்தவித பதிலடியையும் தருவோம்,” என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம், ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, ராணுவத்தின் துணைத் தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக அவர் கிழக்கு கமாண்டின் தலைவராக இருந்தார். சீன எல்லையை ஒட்டி இருக்கும் 4,000 கிலோ மீட்டர் இந்திய எல்லையை கிழக்கு கமாண்ட்தான் நிர்வகித்து வந்தது.

“பாகிஸ்தான், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், தீவிரவாத ஊற்றாக செயல்படும் அமைப்பின் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமையுள்ளது,” என்று சொல்லும் ராணுவத் தளபதி நரவானே, “நமது அண்டை நாடான பாகிஸ்தான தீவிரவாதத்தை ஒரு அரச கொள்கையாக வைத்துள்ளது. ஒரு போலி யுத்தத்தை இதன் மூலம் ஊக்குவிக்கப் பார்க்கிறது. ஆனால், எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது இல்லையா. தீவிரவாதம் என்பது உலகளாவிய பிரச்னை. இப்போதுதான் அதன் வீரியம் உலக நாடுகளுக்குப் புரிகிறது,” என்று விளக்குகிறார்.

இந்தியா, பல காலங்களாக பாகிஸ்தான், தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்றும், அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ‘உலகத் தலைவர்கள், நாடுகளால் ஊக்குவிக்கப்படும் தீவிரவாதத்திற்கு எதிராக நிற்க வேண்டும்,' என்று கோரினார். 
 

aurjqrro

General Manoj Mukund Naravane, இன்று ராணுவத் தளபதியாக பதவியேற்றுக் கொண்டார்

பாகிஸ்தானுக்கும் உலக அளவில் அழுத்தங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த ஆண்டு அக்டோபரில், உலக அளவில் தீவிரவாதங்கள் குறித்து ஆய்வு செய்யும் எப்.ஏ.டி.எஃப் அமைப்பு, பாகிஸ்தானை ‘க்ரே' பட்டியலில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 

Newsbeep

“பாகிஸ்தான் ராணுவத்தின், தீவிரவாத ஊக்குவிப்பு என்பது முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. அந்தத் திட்டம் முழுதாக சிதைந்துவிட்டது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ பல இடங்களில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அனைத்திற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். சீன எல்லையிலும் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அச்சுறுத்தல்களை சமாளிக்க சிறந்த ராணுவ உபகரணங்கள் மற்றும் திட்டமிடல் பின்பற்றப்படும்,” என்று உறுதியளித்துள்ளார் தளபதி நரவானே. 

முன்னதாக, ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், இன்று முப்படைகளின் தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். அவரும் தளபதி நரவானேவின் கருத்தை ஆமோதிப்பது போல, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடு,” என்று விமர்சித்திருந்தார்.
 

With input from PTI, ANI