'பா...பா...பாம்பு' - ஃப்ளோரிடாவில் அதிர்ச்சி நிகழ்வு!

'மரணத்திற்கு நிகரான சம்பவத்தை அனுபவித்தேன்’ என அந்த பெண்மணி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

'பா...பா...பாம்பு' - ஃப்ளோரிடாவில் அதிர்ச்சி நிகழ்வு!

துணிகளுடன் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அமண்டா வைஸ்

சுத்தம் செய்ய போட்ட துணிகளுக்கு இடையே பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு பெண் ஒருவர் பயமடைந்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவின் ப்ளோரிடாவில்தான் நிகழ்ந்துள்ளது.

‘மரணத்திற்கு நிகரான சம்பவத்தை அனுபவித்தேன்' என அந்த பெண்மணி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

 

 
 

வாஷிங்மிஷினில் இருந்து துணியை எடுக்கும் போதுதான் இது நடந்ததாக அமண்டா வைஸ் என்னும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

Newsbeep

‘என் வாழ்க்கையில் இதுவரை இவ்வளவு வேகமாக நான் ஓடியதில்லை. இதயம் பதபதக்க, வியர்வை சிந்த பயத்தில் ஓட்டம் பிடித்தேன்' என அமண்டா பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு உலகம் முழுவதும் வைரல் ஆகியுள்ளது. பலர் தங்கள் கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Click for more trending news