நெதர்லாந்து துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி! - தீவிரவாத தாக்குதலா என போலீஸ் விசாரணை

துப்பாக்கியுடன் வந்த ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்து துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி! - தீவிரவாத தாக்குதலா என போலீஸ் விசாரணை

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The Hague, Netherlands:

நெதர்லாந்து நாட்டில் துப்பாக்கியுடன் வந்த ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

நெதர்லாந்தின் உட்ரெக்ட் நகரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த நகரம் நெதர்லாந்தின் மிகப் பெரும் நகரங்களில் ஒன்று. தாக்குதலை நடத்தியவர் யார் என்று உடனடியாக தெரியவரவில்லை.
 

7ffggffo

 

தீவிரவாத தாக்குதலாக இது இருக்குமா என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடம் தற்போது போலீசின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்தியவர் தப்பிச் சென்று விட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் நெதர்லாந்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. 

துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார். 

தாக்குதலை நடத்தியவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. 

More News