எவரெஸ்ட் சிகரத்தில் 23 முறை ஏறி உலக சாதனை! 49 வயது ஷெர்ப்பா அசத்தல்!!

உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டின் உச்சிக்க்கு திபெத் மற்றும் நேபாளம் ஆகிய 2 வழிகளின் மூலம் சென்றடைய முடியும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
எவரெஸ்ட் சிகரத்தில் 23 முறை ஏறி உலக சாதனை! 49 வயது ஷெர்ப்பா அசத்தல்!!

23 முறை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்ற ஷெர்ப்பா காமி ரிதா


New Delhi: 

எவரெஸ்ட் சிகரத்தில் 23 முறை ஏறி 49 வயதாகும் நேபாள ஷெர்ப்பா காமி ரிதா சாதனை படைத்துள்ளார். 

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் 8,850 மீட்டர் உயரம் கொண்டது. மலையேறும் ஆர்வலர்களுக்கு ஒருமுறையாவது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். 

நேபாள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சிகரத்தில் ஏறுவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஏஜென்சிக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் நிர்ணயிக்கும் தொகையை செலுத்தினால், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்று வர முடியும்.

இந்த சாதனையின்போது, நேபாள மலைவாழ் மக்களான ஷெர்ப்பாக்கள் மலையேறும் ஆர்வலர்களுக்கு உதவியாக இருப்பார்கள். மலையேறும் பாதை, சிக்கல்கள் உள்ளிட்டவை அவர்களுக்கு அத்துப்படி என்பதால், மலையேறும் முயற்சியில் ஷெர்ப்பாக்களின் உதவி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். 

எவரெஸ்ட் உச்சிக்கு செல்லும் முயற்சியில் உயிரிழப்புகளும் நேர்வது உண்டு. கடந்த ஆண்டு இதற்காக மொத்தம் 807 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களில் ஷெர்ப்பா ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு 23 முறை சென்று ஷெர்ப்பா காமி ரிதா சாதனை படைத்துள்ளார். 

 வானிலையை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் எவரெஸ்ட் மலையேற்றம் இருக்கும். நடப்பாண்டில் 378 பேருக்கு எவரெஸ்டிற்கு செல்ல நேபாளம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய தொகை 11 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7.75 லட்சம். லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................